கொரோனா முன்னெச்சரிக்கை விடுமுறை தொடர்பான பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்! - kalviseithi

Mar 16, 2020

கொரோனா முன்னெச்சரிக்கை விடுமுறை தொடர்பான பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து KG வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 16 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்க அறிவித்துள்ளார்கள் . மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கீழ்கண்ட அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டுகோள் விடுத்தார்கள் .

 1 . பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும் , பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார்கள் .

2. கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு குழந்தைகள் செல்வதை தவிர்க்கவும் , தனி நபர் சுகாதாரத்தினை பேணவும் , வீட்டிற்குள் நுழையும் போதும் , அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும் , கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம் எனவும் ,

3. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும் , வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவ்வவ்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும் அறிவுமித்திய . ளார்கள் . எனவே , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப்பள்ளிகளிலும் அனைத்து Ka வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 10 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் இப்பொருள் சார்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைகளை தவறாது பின்பற்ற அனைத்துப்பள்ளிகளுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

இப்பொருள் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை அறிக்கையாக அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி