அரசு பள்ளிகளில் காணாமல்போன ஆசிரியர் பணியிடங்கள் - இனி புதிய ஆசிரியர் நியமனங்கள் நடைபெறுமா? - kalviseithi

Mar 3, 2020

அரசு பள்ளிகளில் காணாமல்போன ஆசிரியர் பணியிடங்கள் - இனி புதிய ஆசிரியர் நியமனங்கள் நடைபெறுமா?


தமிழகத்தில் அரசு பள்ளிகளில்  ஆசிரியரின்றி உபரியாக வருகின்ற மொத்தம் 1706 பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1.8.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பாடவாரியாக ஆசிரியர்களின்றி உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்கள் இயக்குநரின் பொது தொகுப்பிற்கு ஒப்படைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளி கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில்தமிழகத்தில் மொத்தம் 1706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 170 ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. மேலும் வேலூர் 120, காஞ்சிபுரம் 113, திருச்சி 107, திருவண்ணாமலை 106 பணியிடங்கள் சரண் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஆசிரியரின்றி உள்ள உபரி பணியிடங்களை வரும் காலங்களில் காலி பணியிடங்களாகவோ, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருதக்கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளி கல்வி இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பான பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த 1706 பணியிடங்களும் இனி ஆசிரியர்களை நியமிக்க முடியாமல் காணாமல் போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அரசு பள்ளிகளில் புதியதாக இனி பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியான ஒன்றாகும். தற்போது அதிகார பூர்வமாக சரண் செய்யப்பட்டுள்ள 1706 பணியிடங்கள் தவிர கல்வித்துறையின் கணக்கீட்டின்படி மேலும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட பல பிரிவு ஆசிரியர்கள் உபரி பட்டியலில் இருந்து வருகின்றனர்’ என்றார்.

அறிவியல் அதிகம்

சரண் செய்யப்பட்ட பணியிடங்களில் தமிழகத்தில் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 32 மாவட்டங்களில் தமிழ் 308, ஆங்கிலம் 144, கணிதம் 289, அறிவியல் 457, சமூக அறிவியல் 371, இதர பாடங்கள் 30, எஸ்ஜிடி 107 இடங்களும் என்று 1706 பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன.

11 comments:

 1. TRB-POLYTECHNIC and PG- TRB MATHS, ENGLISH, FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245
  (Material available)

  ReplyDelete
 2. கண்டிப்பாக நடக்கும் ...
  விற்பனை உண்டு ...
  அதற்கு பெயர் creation posts...
  SSA, RMSA, SS என பல பெயர்களில் வரும்...

  ReplyDelete
 3. Computer science posting yeppo poduvanganu yarukathu theriyuma. Pls reply...

  ReplyDelete
 4. வாய்ப்பில்லை...அனைத்து Posting களும் அரசுக்கு Surrender செய்து வருகின்றன... மாணவர்களின் நலன் கருதி பெற்ேறார்களும், ஆசிரியர்களும் இனணந்து மீட்டெடுக்க ேவண்டும். இல்லை ேயல் அரசு பள்ளி காணாமல் ேபாகும்.

  ReplyDelete
  Replies
  1. அதற்கு அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கூடுமளவிற்கு அரசு பள்ளிகளில் பாடம் நன்றாக நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை வரனும்

   Delete
 5. Ivanuga irukarai varai onrum nadakathu....theru naiginga

  ReplyDelete
 6. 2013ல் தேர்ச்சி பெற்ற அனைவரும் அவரவர் சான்றிதழ்களை அரசிடம் சரண்டர் செய்து விடுங்கள் 2012 13 தேர்வுகளில் தேர்ச்சிமதிப்பெண் 90 ஆனால் திடிரென தேர்ச்சி மதிப்பெண் 82 என அறிவித்து குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை பணியில் அமர்த்தியது அரசு இது எந்த வகையான நியாயம் இந்த அநியாயத்தை உணர்ந்து நமக்காக நீதியை பெற்றுத்தர அரசோ நீதிமன்றமோ செய்யவில்லை இனி சான்றிதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு உபயோகமும் இல்லை அதனால் 2013 தேர்ச்சி பெற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து அரசிடம் சான்றிதழ்களை சரண்டர் செய்து விடுங்கள்

  ReplyDelete
 7. 7yrs validity period for tet certificate . No answer

  ReplyDelete
 8. 7yrs validity period for tet certificate . No answer

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி