அவசரத் தேவைகளுக்கு உதவிட கட்டுப்பாட்டு மையம், உதவி எண் அறிவிப்பு! - kalviseithi

Mar 28, 2020

அவசரத் தேவைகளுக்கு உதவிட கட்டுப்பாட்டு மையம், உதவி எண் அறிவிப்பு!


பத்திரிகைச் செய்தி - 28 . 3 . 2020

கொரோனா நெருக்கடி காரணமாக , மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து , பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நடு முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

அவசர காரணங்களுக்காக பிரயாணம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஒரு தனி கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டுள்ளது .

தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு , திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள் பெருநகர சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு இடையேயோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் ,

அவர்கள் அவசரகால கட்டுப்பாட்டறை எண் . 75300 01100  ஐ தொடர்பு கொண்டோ / குறுஞ்செய்தி மூலமாகவோ / வாட்ஸ்ஆப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அல்லது gopcorona2020 @ gmail . com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் . மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக அனுமதிச்சீட்டு கோருபவர்கள் கோரிக்கை கடிதத்துடன் தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் .

 மேற்படி கட்டுப்பாட்டறையை கண்காணிக்கபெருநகர சென்னை காவல் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு காவல் துணை ஆணையர் தலைமையில் ஒரு தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது . இந்தச் சேவையானது , மேற்குறிப்பிட்டுள்ள அவசர தேவைகளுக்காக மட்டுமே தவிர , சாதாரண தேவைகளுக்கு அல்ல என தெரிவிக்கப்படுகிறது .
அவசர உதவி எண் . 75300 01100

மின்ன ஞ்சல் முகவரி -
gcpcorona2020 @ gmail . com .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி