சி.பி.எஸ்.இ., அங்கீகாரம்; அவகாசம் நீட்டிப்பு - kalviseithi

Mar 11, 2020

சி.பி.எஸ்.இ., அங்கீகாரம்; அவகாசம் நீட்டிப்பு


சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான, 'ஆன்லைன்' பதிவுக்கு, வரும், 31 வரை அவகாசம்நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகள், ஆண்டுதோறும், அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும் அனுமதி பெற, அதற்கு, ஓர் ஆண்டுக்கு முன்பே, ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், விண்ணப்பபதிவு வசதி செய்து தரப்பட்டுள்ளது.ஒவ்வோர்ஆண்டும், டிச., முதல் பிப்., வரை, 'ஆன்லைன்' பதிவுகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பள்ளிகள், ஆன்லைனில் பதிவு செய்வதில், காலதாமதம் செய்துள்ளன.மேலும், சி.பி.எஸ்.இ.,யின் கிடுக்கிப்பிடி காரணமாக, பள்ளிகள் தரப்பில், பல்வேறு ஆவணங்களை இணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்காக, கூடுதல் அவகாசம் வேண்டும் என, பள்ளிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, 'வரும், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்' என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி