பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால்? - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புதிய உத்தரவு - kalviseithi

Mar 10, 2020

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால்? - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புதிய உத்தரவுபள்ளிகளில் பயன்படாமல் மூடிக்கிடக்கும் வகுப்பறைகளில் உணவு அருந்தும் கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளில் பல வகுப்பறைகள் பயன்படுத்தப்படாமல் மூடியே கிடக்கிறது.

இந்த வகுப்பறைகளை பயன்படுத்துவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுவதை மாணவர்கள் திறந்த வெளியிலும் வராண்டாவிலும் ஆங்காங்கே அமர்ந்து உண்ணுகின்ற வழக்கம் பல பள்ளிகளில் இருந்து வருகிறது.

எனவே, மாணவ, மாணவிகள் சுகாதாரமான முறையில் மதிய உணவு உட்கொள்ளும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் காலியாக மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை மாற்றி சீரமைத்து உணவு அருந்தும் கூடங்கள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக சமூக நல ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பள்ளிகளில் கல்வி பயன்பாட்டிற்கு பயன்படாமல் மூடிக்கிடக்கும் வகுப்பறையினை மாற்றி சீரமைத்து மாணவர்களின் உணவருந்தும் கூடங்களாக அமைத்துத்தர வேண்டும்.

இதற்கு ஏதுவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் மற்றும் முழு முகவரியுடனும் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பள்ளியில் உள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, சத்துணவு உண்ணும் பயனாளிகளின் எண்ணிக்கை, மொத்த வகுப்பறைகள் எண்ணிக்கை, கல்வி பயன்பாட்டிற்கு பயன்படாத வகுப்பறைகள் எண்ணிக்கை போன்ற விபரங்களை சேகரித்து அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

3 comments:

 1. Why? The students joining government schools are in downward trend?
  . What action plan the government is contemplating for increasing the admissions.
  . Appointments of meritorious teachers in all schools.
  .To improve the quality of English education what are the methodologies are being followed. How to improve the quality of govt schools?
  When private schools can attract many students where and what govt lacks?
  Quality teachers is a must.
  Our education has become of low quality why?
  Have you ever thought off????

  ReplyDelete
 2. Solutions:
  Concentration on Nursery education
  Primary education
  Middle level schools
  Secondary, Higher secondary education.
  Improve by appointment of meritorious teachers.
  You are following the substandard policy of recommendation culture, reservation, corruption in appointments.
  Scrap the reservation policy in appointments by posting hard working dedicated, talented teacher postings a must.
  Inform the people that we will give the best education to our younger generation.
  English education by appointing post graduate teaching community.
  Create an atmosphere by improving infrastructure as that of college in nursery school itself.
  Then you see the parents will come only to govt schools.
  Your aanganwadi schools are not teaching grounds. How?
  The aayas are uneducated, not effective in giving best outputs.
  Change the whole structure Mr Education minister.

  ReplyDelete
 3. Kalyana mandapam akidalame ?!😁😁😁

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி