SCERT - ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி கட்டுரை அனுப்பும் போட்டி - கடைசிதேதி 15.03.2020 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2020

SCERT - ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி கட்டுரை அனுப்பும் போட்டி - கடைசிதேதி 15.03.2020


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ( SCERT )

கலைத்திட்டம் வடிவமைத்தல் , பாடத்திட்டங்கள் வரையறுத்தல் , பாடநூல்கள் உருவாக்குதல் . ஆசிரியர் . மாணவர்களுக்கான கட்டகங்கள் , பயிற்சி ஏடுகளை வடிவமைத்துப் பயிற்சி அளித்தல் , பள்ளிகளைப் பார்வையிட்டுக் கற்றல் கற்பித்தல் மேம்படக் களத்தில் உதவுதல் மேலும் கல்வி சார் செயலாய்வுகள் , ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்ற பல பணிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது . தமிழகத்தின் கல்வித் தரமேம்பாட்டினை உயர்த்தும் வகையில் தேசிய மற்றும் மாநில அளவிலான கருத்தரங்குகளையும் கல்விசார் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தி வருகிறது . அதன் ஒரு பகுதியே இக்கருத்தரங்க நிகழ்வாகும் .

கருத்தரங்கம் :

தமிழ் மொழி இலக்கிய , இலக்கண வளம் மிகுந்தது . சொல் வளமும் சொல்லாழமும் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்தது . மொழி இலக்கணத்தோடு வாழ்க்கை இலக்கணத்தையும் வேராகக் கொண்ட உயர்தனிச் செம்மொழி . அடிச்சொல் வேர்ச்சொல்லாகி , ஓரெழுத்து ஈரெழுத்துச் சொல்லாகத் தொடர்ந்து , பிறமொழிச்சொல் ஆக்கமும் பெற்றது . மொழி கற்றலுக்கு முதன்மையான தொல்காப்பியம் , நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது . ஆசிரியருக்கு இலக்கணம் வகுத்த நன்னூலார் , கொள்வோன் கொள்வகை அறிந்து கற்பித்தல் என்ற கல்வியியல் உளவியல் அணுகுமுறையை அன்றே வழங்கியுள்ளார் படித்தல் அறிவைச் சீராக்கிச் செப்பமிட்டு அளிப்பவை பள்ளிகள் . பள்ளிகளில் படித்தலை ஊக்குவிப்பவர்கள் ஆசிரியர்கள் . ஆசிரியர்களின் சிறந்த , புதுமையான உத்திகளும் அணுகுமுறைகளும் படித்தலை வலுவூட்டும் . அத்தகு உத்திகளைக் கண்டறிந்து பரவலாக்கும் பொருட்டு மனிதவள மேம்பாட்டுத்துறையின் நிதி உதவியுடன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , தமிழ்மொழி படித்தல் திறன் மேம்பாட்டிற்கான செயலாக்க அணுகுமுறைகள் எனும் தலைப்பில் மாணவர் கற்றல் தரத்தை உயர்த்தும் நோக்கில் மாநில அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது .






No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி