தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதை முன்னிட்டு கேரள, கர்நாடக மாநிலங்களில் மார்ச் 31ஆம் தேதி வரைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் பொதுநலன் கருதி கூட்டங்கள் பேரணிகள் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது
கொரோனா பரவும் தீவிரத்தை அரசு உணர்ந்து, குழந்தைகள் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் உள்ளது என்ற காரணத்தினாலும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள காரணத்தினாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு அருகேயுள்ள மாநிலங்களில் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உணர்ந்து, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
கேரளாவில் மாணவர்களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், தேர்வுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.பொதுத் தேர்வுகள் மட்டும் மாணவர்கள் வந்து எழுதி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அங்கன்வாடி முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் மட்டும் வந்து தேர்வினை எழுதிச் செல்லலாம்.
அங்கன்வாடிகள் மழலையர் பள்ளிகள் போன்ற இடங்களிலும் குழந்தைகள் நெருக்கமாக இருப்பதால், கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
Leave not necessary. We can conduct schools as usual.
ReplyDeleteஇதையெல்லாம் ஆசிரியர் ஆன நீங்கள் கோரிக்கை வைத்து கேட்பதை தவிர்த்து மாணவர் அமைப்புகள் மூலமாகவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக அமைப்புகள் மூலமாகவும் கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலமாகவும் கோரிக்கை வைப்பது சாலச்சிறந்தது என்று எண்ணுகிறேன்
ReplyDelete👍👍🤐
Deleteவிடுமுறை விட்டால்தான் மாணவர் வீணே சுற்றி நோய்களை வரவழைத்துக் கொள்வர்
ReplyDeleteபள்ளியில் இருப்பதே பாதுகாப்புதான்
பள்ளிகளில் ஒரு மாணவர்களுக்கு நோய் வந்தால் மற்ற வர்களுக்கு பரவும். மற்ற நாடுகளில் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது
ReplyDeleteவருமுன் காப்போம். வந்தால் இறப்பு உறுதி. பெற்றோர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
ReplyDeleteApr 01.la irundhu corona varadha ?!
ReplyDeleteNamma students veetuku ulla irukka mattan
ReplyDelete