தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2020

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை!


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதை முன்னிட்டு கேரள, கர்நாடக மாநிலங்களில் மார்ச் 31ஆம் தேதி வரைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் பொதுநலன் கருதி கூட்டங்கள் பேரணிகள் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது

கொரோனா பரவும் தீவிரத்தை அரசு உணர்ந்து, குழந்தைகள் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் உள்ளது என்ற காரணத்தினாலும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள காரணத்தினாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு அருகேயுள்ள மாநிலங்களில் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உணர்ந்து, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கேரளாவில் மாணவர்களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், தேர்வுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.பொதுத் தேர்வுகள் மட்டும் மாணவர்கள் வந்து எழுதி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அங்கன்வாடி முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் மட்டும் வந்து தேர்வினை எழுதிச் செல்லலாம்.

அங்கன்வாடிகள் மழலையர் பள்ளிகள் போன்ற இடங்களிலும் குழந்தைகள் நெருக்கமாக இருப்பதால், கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

8 comments:

  1. Leave not necessary. We can conduct schools as usual.

    ReplyDelete
  2. இதையெல்லாம் ஆசிரியர் ஆன நீங்கள் கோரிக்கை வைத்து கேட்பதை தவிர்த்து மாணவர் அமைப்புகள் மூலமாகவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக அமைப்புகள் மூலமாகவும் கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலமாகவும் கோரிக்கை வைப்பது சாலச்சிறந்தது என்று எண்ணுகிறேன்

    ReplyDelete
  3. விடுமுறை விட்டால்தான் மாணவர் வீணே சுற்றி நோய்களை வரவழைத்துக் கொள்வர்
    பள்ளியில் இருப்பதே பாதுகாப்புதான்

    ReplyDelete
  4. பள்ளிகளில் ஒரு மாணவர்களுக்கு நோய் வந்தால் மற்ற வர்களுக்கு பரவும். மற்ற நாடுகளில் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது

    ReplyDelete
  5. வருமுன் காப்போம். வந்தால் இறப்பு உறுதி. பெற்றோர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  6. Apr 01.la irundhu corona varadha ?!

    ReplyDelete
  7. Namma students veetuku ulla irukka mattan

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி