பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - சூழலைப் பொறுத்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை - kalviseithi

Mar 20, 2020

பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - சூழலைப் பொறுத்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை


பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு மார்ச் 24-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதியும் பொதுத்தேர்வுகள் முடிவடைய உள்ளன. இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்புக்கு மார்ச் 27-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் மாணவர்கள் நலன் கருதி பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்தன. தொற்று பரவல் தீவிரமானால் பத்தாம் வகுப்புக்கு மட்டுமாவது பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. பாமக நிறுவனர் ராமதாஸும் இதனை வலியுறுத்தி இருந்தார்.

இதனால் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போதைய சூழலில், தமிழகத்தில் பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை. ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத்தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும். தேர்வு மையங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனினும் வரும் நாட்களில் நிலவும் சூழலைப் பொறுத்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி