பள்ளிக்கல்வி இயக்குனர் பரிசீலிக்க , ஐகோர்ட்டு உத்தரவு! - kalviseithi

Mar 20, 2020

பள்ளிக்கல்வி இயக்குனர் பரிசீலிக்க , ஐகோர்ட்டு உத்தரவு!


கோப்புகளில் கையெழுத்து போட லஞ்சம் கேட்கும் கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் பரிசீலிக்க , ஐகோர்ட்டு உத்தரவு.

கன்னியாகுமரி மாவட்டம் , மார்த்தாண்டம் வல்லந்தன்விளையைச் சேர்ந்த சத்தியராஜ் , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது :
மேலப்பாளையில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 1 . 3 . 2000 அன்று இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டேன் . கடந்த 2018 - ம் ஆண்டில் பிரகோடு பகுதியில் உள்ள பள்ளிக்கு என்னை இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார் . எங்கள் பள்ளி ஆசிரியர்கள் , அலுவலர்களின் சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகளை பெறுவதற்காக மாவட்ட கல்வி அலுவலகத் திற்கு சென்று வருவது வழக்கம் . இந்த நிலையில் எங்கள் பள்ளி தொடர்பான கோப்புகளில் மாவட்ட கல்வி அதிகாரி கையெழுத்து போடும்படி அவரிடம் கேட்டேன் . ஆனால் அவர் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டார் . இதுகுறித்து மாவட்ட முதன்மை அதிகாரியிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை . அவரும் லஞ்சம் கேட்கிறார் . இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட மேல் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பியும் எந்த பலனும் இல்லை . எனவே கடமையை செய்ய லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறியிருந்தார் இந்த வழக்கு நீதிபதி பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது . முடிவில் , மனுதாரர் அனுப்பிய புகார் மனுக்களை தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து உரிய நடவ டிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு , வழக்கை முடித்துவைத்தார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி