அரசு ஊழியர் குழந்தைகளை பாதுகாக்க மழலையர் காப்பகம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2020

அரசு ஊழியர் குழந்தைகளை பாதுகாக்க மழலையர் காப்பகம்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ( டிஎன்பிஎஸ்சி ) போட்டித்தேர்வுகள் , கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் என்று அமைச்சர் டி . ஜெயக்குமார் அறிவித்தார் .

மீன்வளம் , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறைமானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து மீன்வளத் துறை , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி . ஜெயக்குமார் அறிவிப்புகளையும் வெளியிட்டார் .

அதன் விவரம் வருமாறு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பாதுகாப்பு வசதியைப் பலப்படுத்தும் பொருட்டு , விரல் ரேகைப் பதிவு ( Bio - Metric attendance ) , ஜி . பி . எஸ் . , கண்காணிப்பு கேமரா ( CCTV ) மற்றும் ஜாமர் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் ரூ . 5 கோடியில் ஏற்படுத்தப்படும் .

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் . சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் .

 சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக் ககத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுடைய மழலையர்களை அலுவலகப்பணி நேரங்களில் கவனித்துக் கொள்ள புதிதாக மழலையர் காப்பகம் ( Creche ) அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட 11 அறிவிப்புகள் வெளி யிடப்பட்டன .

2 comments:

  1. காப்பகத்தில் குழந்தைகள் ஒன்று கூடினால் அங்கு கொரோனா நோய் வராதா ? அப்படி வந்தால் அதற்கு அரசு பொறுப்பாகுமா ? தயவுசெய்து கனவு கண்டதெல்லாம் அறிவிக்க வேண்டாம். வேறு ஏதாவது யோசித்து பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது கொரோனாக்காக அல்ல, கணவன், மனைவி இரண்டு பேரும் அரசு வேலை செய்பவர்களாய் இருந்தால் அவர்களின் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இக்காப்பகத்தில் பாதுகாக்கப்படும். மாலையில் குழந்தகளை அழைத்து செல்லலாம்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி