தமிழகம் முழுவதும் 8 , 600 பள்ளிகளில் சுற்றுச்சுவர் சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2020

தமிழகம் முழுவதும் 8 , 600 பள்ளிகளில் சுற்றுச்சுவர் சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!


 சட்டசபையில் , தி . மு . க . உறுப்பினர்
 டி . ஆர் . பி . ராஜா ( மன் னார்குடி ) , ' மன்னார்குடி ஒன்றியம் , வடபாதி பள்ளி கட்டி டங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது . அங்கே வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் . கஜா புயலால் ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் பள்ளிக்கட்டிடம் முழுவது மாக சேதம் அடைந்தது . நீடாமங்கலத்தில் உயர்நிலைப்பள் ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்து வருகிறது .

ராயபுரம் ஊராட்சியில் வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் வ மரத்திற்கு அடியில் இருந்து படித்து வருகிறார்கள் . எனவே அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு நடவடிக்கை ல எடுக்க வேண்டும் ' என்றார் .

இதற்கு அமைச்சர் கே . ஏ . செங் கோட்டையன் பதில் அளித்து கூறியதாவது : நீடாமங்கலத்தில் இருக்கின்ற பள்ளிகள் சுற்றுச்சுவர்கள் சரியாக இல்லை , சுற்றுச்சுவர் இல்லாததால் அங்கே பல தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று உறுப்பினர் கூறியுள்ளார் .

உள்ளாட்சித்துறை அமைச்சரால் இந்த ஆண்டு 1 , 600 உயர்நிலைப்பள்ளி , மேல் நிலைப்பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் அமைப்பதற்கும் , 7 ஆயிரம் நடுநிலைப்பள்ளி , தொடக் கப்பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கும் நிதி வழங்குவ தற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

 இந்த நிதியை பயன்படுத் தும்போது , பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் இருக்காது . மேலும் ஸ்மார்ட் கிளாஸ் இந்த ஆண்டு 7 , 500 பள்ளிகளுக்கு கொண்டு வருவதற்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது . எனவே உறுப்பினர் குறிப் பிடும் பள்ளிகளுக்கும் நிதி வழங்கப்படும் . இவ்வாறு அவர் கூறினார் . 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி