யாருக்கெல்லாம் வெளியூர் செல்ல அனுமதி? - kalviseithi

Mar 31, 2020

யாருக்கெல்லாம் வெளியூர் செல்ல அனுமதி?கொரோனா வைரஸ் பரவுவவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய நிகழ்வுகளுக்கு வெளியூர் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சில நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது.

அவை,

*அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மகன், மகள் என, ரத்த சம்பந்தமானவர்களின் திருமணத்திற்கு மட்டுமே, அனுமதி சீட்டு வழங்கப்படும். மேற்கண்ட நபர்களின் இறப்பு தொடர்பாக, துக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, அனுமதி வழங்கப்படும். பெரியப்பா, சித்தப்பா, மாமா போன்ற உறவினர்கள் இறப்புக்கு, அனுமதி சீட்டு கிடையாது

*குடும்ப உறுப்பினர்களான, அண்ணன், அக்கா, தங்கை, மனைவி; நோய் வாய்ப்பட்டு தனியாக இருக்கும், தாத்தா, பாட்டி ஆகியோரின் மருத்துவம் தொடர்பாக செல்லவும், மனைவியின் பிரசவம்தொடர்பாக செல்லவும், அனுமதி சீட்டு வழங்கப்படும்.

*வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில், துணை ஏதும் இல்லாமல் தனியாக வசிக்கும், ரத்த சம்பந்தமான முதியோர்களையும், நோய் வாய்ப்பட்ட பெற்றோரை அழைத்து வரவும், அனுமதி வழங்கப்படும்

*பெற்றோரை விட்டு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில்,உறவினர்களிடம் இருக்கும், இரண்டரை வயது மகன், மகளை அழைத்து வர, அனுமதி வழங்கப்படும்

*கோரிக்கை கடிதங்களை, சந்திக்க விரும்பும் நபர்களின், தேவையான அடையாள ஆவணங்களுடன், சென்னை, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்

*மேலும், 75300 01100 என்ற, மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாகவும், 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக, கோரிக்கை கடிதம் மற்றும் அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தும், அனுமதி சீட்டு கோரலாம். gcpcorona2020@gmail.com என்ற, மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்

*கோரிக்கை கடிதங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து, உண்மையாக இருந்தால் மட்டுமே, அனுமதி சீட்டு வழங்கப்படும். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி