தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள அரசு நிர்வாகத்தில் பல்வேறு பிரிவுகளில் உயரதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பள குறைப்பை அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஏப்., 14 வரையில், 21 நாட்களுக்கு, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 'மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் முதல்வர் அலுவலகம் வெளியிடப்பட்ட அறிவிப்பு வருமாறு,தெலுங்கானாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி, தெலுங்கானா அரசில் முதல்வர், மற்றும் அமைச்சரவை, எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி.க்கள், மாநில நிறுவனத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தவிர ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளுக்கு 60 சதவீத சம்பளக் குறைப்பு இருக்கும்.
மற்ற பிரிவு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளக் குறைப்பும், நான்காம் வகுப்பு, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, 10 சதவீத சம்பள குறைப்பும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மானியங்களைப் பெறும் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் சம்பள குறைப்பு இருக்கும். .இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Arivu irukka?. Arasu uzhiyarukku wife pulla kuttinga illaya. Illa kadan illaya. Evvalavo prachainagal irukku. Ithallam avan avanakkuthan theriyum.
ReplyDeleteVery good
ReplyDeleteIt is a problem of Telengana state
ReplyDeleteEndha state a iruntha enna. Nalaikku namakkum itha nilamai varum. Katta pakkathu state parungannu solluvanga.
Deleteவரிகட்டறவனுக்கு பிரச்சனைன்னா .சம்பளத்தை குறைக்காம என்ன பன்ன முடியும். அறிவு உனக்கு இருக்கா. நானும் அரசு ஊழியர்தான்
ReplyDeleteSaringa ejaman.
Deleteசரியான முடிவு தான்... கூடவே அரசு ஊழியர்களின் அனைத்து வங்கி கடன்களையும் ரத்து பண்ணிடுங்க....
ReplyDeleteஅத ஏனுங்க 75%....50%.... னு குறைக்கனும்.... எல்லாதையும் எடுத்துகிட்டு நடுதெருவுல விட்டர்லாமே..
ReplyDelete