அரசுத் தேர்வுகள் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை ( செயல்முறைத் தேர்வுகள் உட்பட ) திட்டமிட்டபடி நடைபெறும் . இத்தேர்வுகள் முடியும் வரை தேர்வு எழுதும் , மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது .
அரசு பொது தேர்வு எழுதும் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தங்கியிருப்பின் அம்மாணவர்களுக்கு மட்டும் விடுதிகள் தொடர்ந்து இயங்க அனுமதியளிக்கப்படுகிறது .
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சுகாதாரமாக இருக்க அறிவுறுத்தவும் , மேலும் மாணவர்கள் தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியை சோப்பு கொண்டு அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்படுகிறது .
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நடப்பு கல்வி ஆண்டுக்குரிய தேர்வுப் பணிகள் மற்றும் 2020 - 2021 ஆம் ஆண்டிற்குரிய TLM Preparation , Year Plan Preparation , Time - Table Preparation , DIKSHA App மூலம் QR Code உள்ள பாட விவரங்களை சேகரித்தல் , Activity , do your know - ல் தரப்பட்டுள்ள தகவலுக்குரிய விவரங்கள் இணையத்தலத்திலிருந்து பதிவிறக்கம் செய்து சேகரித்து வைத்தல் , ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பிற்குரிய மாதிரிகளை உருவாக்குதல் , புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகள் போன்ற பணிகளை பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்காண் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி