DSE - முதல்வரின் உத்தரவின்படி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2020

DSE - முதல்வரின் உத்தரவின்படி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!


பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் சென்னை 6

ந.க.எண் 014598/பிசி/2020 நாள் : 25.03.2020

பள்ளிக்கல்வி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஒழுங்குமுறைகள் அனைத்து வகை பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல்




பார்வை - 1ல் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பத்திரிக்கைச் செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து இன்று வரை நடைமுறையில் உள்ளது .

2 . பார்வை 3ல்காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது . மேலும் , 24 . 03 . 2020 மாலை 6 . 00 மணி முதல் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது .

3 . இதன் காரணமாக அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . எனவே , 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வு இதன்மூலம் இரத்து செய்யப்படுகிறது . இக்கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்படுகிறது .

இது சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

இதனைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுப்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

மேலும் , இது சார்ந்த அறிக்கையினை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பிவைத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி