பிளஸ் 2 மறுதேர்வு குறித்த தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள் ( நாள் : 25.03.2020) - kalviseithi

Mar 25, 2020

பிளஸ் 2 மறுதேர்வு குறித்த தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள் ( நாள் : 25.03.2020)


" 24 . 03 . 2020 அன்று தமிழ்நாடு முழுவதும் + 2 பொதுத்தேர்வு நடைபெற்றது . அத்தேர்வில் சில மாணவர்கள் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் , தங்களால் தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததை கனிவோடு பரிசீலித்து , 24 . 03 . 2020 அன்று + 2 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும் , இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன் ” மேற்குறிப்பிட்ட மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .

1 . 24 . 03 . 2020 அன்று தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு நடத்தப்பட்ட + 2 தேர்வுகளை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும் . இத்தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் , அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் .

2 . அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு , மேற்குறிப்பிட்ட விவரத்தினை , தங்களது பள்ளிகளில் 24 . 03 . 2020 அன்று நடைபெற்ற + 2 தேர்வுகளை எழுத முடியாத சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும் .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி