NMMS - தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் ( National Means cum - Merit Scholarship Scheme ) தேர்ச்சி பெற்ற இதுநாள்வரையில் கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவ / மாணவியர்களின் விவரங்களை உடன் அனுப்ப கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2020

NMMS - தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் ( National Means cum - Merit Scholarship Scheme ) தேர்ச்சி பெற்ற இதுநாள்வரையில் கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவ / மாணவியர்களின் விவரங்களை உடன் அனுப்ப கல்வித்துறை உத்தரவு.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கடிதத்திற்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் உடனடியாக ஈர்க்கப்படுகிறது .

மேற்காண் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கடிதத்தின்படி கடந்த ஆண்டுகளில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை NMMSS கல்வி உதவித்தொகை முழுமையாக கிடைக்கப்பெறாத அல்லது பகுதியாக கிடைக்கப்பெறாத மாணவ / மாணவியர்களின் விவரங்களைப் பெற்று உடன் அனுப்பி வைக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் ( National Means cum - Merit Scholarship Scheme ) தேர்ச்சி பெற்ற இதுநாள்வரையில் மேற்படி கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவ / மாணவியர்களின் விவரங்களை ஒரு மாணவரும் விடுபட்டுப் போகாமல் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெற்று இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தொகுத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் இணை இயக்குநர் ( நாட்டு நலப்பணித் திட்டம் ) அவர்களின் மின்ன ஞ்சல் முகவரிக்கு ( idnsed @ nic . in ) 06.03.2020 அன்று மாலை 5 மணிக்குள் தவறாமல் அனுப்பி வைக்குமாறு மீளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதில் எவ்வித சுணக்கமும் இன்றி செயல்பட்டு NMMSS தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்களிடமிருந்து முழுமையாகப் பெற்று அனுப்பி வைக்குமாறு தெரிவிப்பதுடன் 06.03.2020 அன்று மாலை 6 மணி நிலவரப்படி எவ்வித விவரங்களும் முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து பெறப்படவில்லை எனில் சார்ந்த மாவட்டத்தில் NMMSS தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவர்கள் எவரும் இல்லை என " இன்மை அறிக்கை " பெறப்பட்டதாக கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி