TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு ஊதியப்பலன்கள் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு தொடுத்த Minority/Non- Minority பள்ளி ஆசிரியர்கள் பட்டியல் அனுப்புதல் சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2020

TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு ஊதியப்பலன்கள் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு தொடுத்த Minority/Non- Minority பள்ளி ஆசிரியர்கள் பட்டியல் அனுப்புதல் சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் - 2009கீழ் நியமன தகுதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) தேர்ச்சி பெறவேண்டும் என மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது .

தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றி பள்ளி நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டவர்களால் நியமனம் ஒப்புதல் கோரியும் மற்றும் தொடர் ஊதிய உயர்வு மற்றும் இதர பணப்பலன்கள் அனுமதிக்க கோரியும் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் தொடர்ந்து அதில் தீர்ப்பாணைகளும் பெற்றுவுள்ளனர் .

மேலும் ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பாணையின் மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ஊதியம் மட்டுமே பெற்று வரும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுகள் மற்றும் ஊக்க ஊதிய உயர்வுகள் கோரி வழக்குகள் தொடரப்பட்டு தீர்ப்பாணைகளும் பெறப்பட்டு வருகின்றன .

இது குறித்த அறிக்கையினை அரசுக்கு சமர்பிக்க வேண்டியுள்ளதால் தற்போது இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அதன் விவரத்தினை 19.03.2020க்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இதில் எவரது பெயரும் விடுபடாமலும் எவ்வித காலதாமத இன்றி உடன் அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

TET Pending Case DSE Proceeding - Full Details - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி