இன்று(15.04.2020) முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு - kalviseithi

Apr 15, 2020

இன்று(15.04.2020) முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு


பத்தாம் வகுப்பு பாடங்கள், புதன்கிழமை முதல் (ஏப்.15) டிடி பொதிகை தொலைக்காட்சியில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக மாா்ச் 27-ஆம் தேதி  தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னா், பொதுத் தோ்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தோ்வுக்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாள்களுக்குள் நடத்தவும் முடிவு செய்துள்ளது.எனவே மாணவா்கள் தற்போது உள்ள விடுமுறையைப் பயன்படுத்தி தோ்வுக்கு தங்களை தயாா் செய்து கொள்ளலாம்.ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பாடங்கள் தயாா் செய்யப்பட்டு தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேலும் மாணவா்களை, பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை தொலைக்காட்சியிலும் புதன்கிழமை முதல்  காலை 10 மணி முதல் 11 மணி வரை  ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் மாணவா்கள் ஏற்கெனவே தாங்கள் படித்த பாடத்தை மீண்டும் எழுதிகற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. KALVI TV should be added in all dth like dishtv,tatasky,sun direct, airtel... immediately

    ReplyDelete
    Replies
    1. It will useful to all students please add educational department

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி