ரூ.200க்கு 19 வகை காய்கறிகள் - தோட்டக்கலைத் துறை - kalviseithi

Apr 2, 2020

ரூ.200க்கு 19 வகை காய்கறிகள் - தோட்டக்கலைத் துறை


தோட்டக்கலைத் துறையால், 19 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு, 200 ரூபாய்க்கு, சென்னையில் விற்கப்படுகிறது.

சென்னையில், மாதவரம் தோட்டக்கலை பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, திருவான்மியூர், அண்ணாநகர் தோட்டக்கலை கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில், இந்த காய்கறி கடைகள் செயல்படுகின்றன. முன்பு, எடை கணக்கில், காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, 19 வகை காய்கறிகள் அடங்கிய,'பேக்கேஜ்' 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதில், தக்காளி, பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், தேங்காய், முருங்கைக்காய், உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, குடை மிளகாய், கோஸ்.கத்தரிக்காய், பச்சை மிளகாய், எலுமிச்சை, வெண்டைக்காய், இஞ்சி, நுாக்கல், புதினா, கொத்துமல்லி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றை, மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்ல துவங்கியுள்ளனர். மக்கள் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி