யார், யாருக்கு தேர்வு? சி.பி.எஸ்.இ. அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2020

யார், யாருக்கு தேர்வு? சி.பி.எஸ்.இ. அறிவிப்பு!


சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., செயலர், அனுராக் திரிபாதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் இன்றி, 'ஆல் பாஸ்' என்ற அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும். ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, ஏற்கனவே நடந்த தேர்வுகள் மற்றும் மாணவர்களின் செயல்திறன் குறித்த மதிப்பீடுகளின்படி, தேர்ச்சி வழங்கப்படும்.

பத்தாம் வகுப்புக்கு, டில்லி வடகிழக்கு பகுதி மாணவர்களுக்கு மட்டும், இதுவரை நடத்தாத, ஹிந்தி, ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். மற்ற மாநிலங்களில், 10ம் வகுப்புக்கு, இந்த கல்வி ஆண்டில் வேறு தேர்வுகள் நடத்தப்படாது.பிளஸ் 2வில் முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும்.

அதாவது, வணிக படிப்புகள், புவியியல், ஹிந்தி, மனை அறிவியல், சமூகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் செயல்முறை, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்குமட்டும் தேர்வு நடத்தப்படும்.டில்லி வடகிழக்கு மாணவர்களுக்கு, ஆங்கிலம், கணிதம், பொருளியல், உயிரியல், அரசியல் அறிவியல், வரலாறு, இயற்பியல், கணக்கு பதிவியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தப்படும் தேதி, தேர்வு துவங்கும் தேதிக்கு, 10 நாட்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி