45,000 அங்கன்வாடி பணியாளர்கள் - கொரோனா பரவல் தடுப்பு பணியில்...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2020

45,000 அங்கன்வாடி பணியாளர்கள் - கொரோனா பரவல் தடுப்பு பணியில்...!


கொரோனா பரவலை தடுக்க வீடு வீடாக கணக்கெடுப்பு பணியில் தமிழகம் முழுவதும் 45 , 000 அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 அவர்களுக்கு எந்தவித பாது காப்பு வசதியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு . வரதராஜன் கூறியதாவது :

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் வீடு , வீடாக கணக்கெடுக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் .

இவர்கள் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் . ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட வில்லை . முகக்கவசம் , கையுறை போன்ற   வசதிகளை செய்யவில்லை . சாப் பாடு , தண்ணீர் போன்ற எந்த வசதியையும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை
சுகாதாரத்துறையினரிடம் கேட்டால் எங்களுக்கே பாதுகாப்பு கவசங்கள் இல்லை என்று கூறு கின்றனர்.

 உயிருக்கு எந்தவித பாதுகாப்பும்
இல்லா மல் களத்தில் இருக்கும் எங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனென்றே தெரியவில்லை . டாக்டர்கள் , செவிலியர்கள் , தூய்மை பணியாளர்கள் தான் கண்ணுக்கு தெரிகிறது . ஆனால் , அங்கன்வாடி பணியாளர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை முதல்வரிடம் இதுவரை சொல்லாமல் இருப்பது ஏன் ? என்று தெரியவில்லை . களத்தில் இறங்கி பணியாற்ற நாங்கள் பயப்படவில்லை . எங்களுக்கு தேவை யான அடிப்படை வசதியை உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி