அரசு அனுமதித்தும் சம்பளம் வாங்க முடியாமல் பகுதிநேர ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2020

அரசு அனுமதித்தும் சம்பளம் வாங்க முடியாமல் பகுதிநேர ஆசிரியர்கள்!


அரசு ஊதியம் கொடுத்தும் பெற முடியாத நிலையில் - 11,700 பகுதி நேர ஆசிரியர்கள்.

அரசு ஊதியம் கொடுத்தும் பெற முடியாமல் 11 , 700 பகுதி நேர ஆசிரியர்கள் தவித்து வருவதாகவும் இதுகுறித்து உடனடி நட வடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர் . தமிழகத்தில் அரசாணை177 நியமனத்தின் கீழ் 16 , 549 பகுதி நேர ஆசி ரியர்கள் ரூ . 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தமிழக அரசுப்பள்ளிகளில் 2012 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்கள்.

பல்வேறு காரணங்களால் சிலர் பணியிலிருந்து விலகிய பிறகு தற் போது 11700பேர்மாநிலம் முழுவதும் உடற்கல்வி , ஓவியம் , இசை ஆசி ரியர்களாக மாதத்திற்கு 12 நாள்கள் பணிபுரிந்து வருகின்றனர் . அவர்க ளுக்குத் தற்போது மாத தொகுப்பூதியமாக ரூ . 7700 வழங்கப்பட்டுவரு கிறது . இந்தத் தொகை மாநிலத் திட்ட இயக்குநரகம் மூலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது .

 இதையடுத்து அனைவருக்கும் கல்வி இயக்கம் ( எஸ்எஸ்ஏ ) கணக்கில் வரவு வைக்கப்படும் . பின்னர் பள்ளிகளின் மேலாண்மைக்குழு ( எஸ் எம்சி ) கணக்குகாசோலையில் சம்பந்தப்பட்டதலைவர்மற்றும் செயலர் கையொப்பம் பெற்று இறுதியில் பகுதிநேர ஆசிரியர்களின் கணக்கில் சம்பளமாக வழங்கப்படுகிறது . இந்தத் தொகையை ஒவ்வொருபள்ளியி லும் உள்ள ஆசிரியர்கள் எஸ்எம்சி வழங்கும் காசோலையை வங்கியில் செலுத்தி சம்பள தொகையைப் பெற்று வந்ததால் இதுவரை பிரச்னை இல்லை .

ஆனால் இந்த மாதம் கரோனாதடுப்பு நடவடிக்கைக்கான 144 தடை உத்தரவால் மார்ச் மாத சம்பளக்காசோலையில் கையெழுத்திடும் தலைமையாசிரியரும் எஸ்எம்சி தலைவரும் பள்ளிக்கு வராததால் பள் ளிக்கணக்கில் சம்பளப் பணத்தினைச் செலுத்திய பிறகும் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் வங்கியில் அவரவர் கணக்கில் செலுத்தப்படா மல் சிக்கலில் உள்ளது . இதனால் அவர்கள் நெருக்கடியான சூழலில்
சம்பளமின்றித் தவித்து வருகிறார்கள்.

 எனவே எஸ்எம்சிகணக்கில் இருந்து பகுதி நேர ஆசிரியர்கள் வங்கிக் கணக்கில் சம்பளம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்தும் இனிவரும் காலங்களில் வட்டார வளமையங்கள் மூலமாக பகுதி நேர ஆசிரியர்க ளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் என
தமிழ் நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர்
சி . செந்தில்குமார் ,
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பி . கே . இள மாறன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

4 comments:

  1. Mr.செந்தில் இந்த கணினி ஆசிரியர்கள் எங்கப்பா கானும் மிதமுள்ள 12000ல் 300 பேர் எங்கம்மா நீலாம் எதுக்கு தலைவலியா இருக்க நீ மூடிட்டு இரு நடக்குது நல்லாவே நடக்கும் சில பூஜையில் கரடி மாதிரி அரசு ஏதாவது ஒரு நல்ல திட்டம் கொண்டு வந்தால் உடனே பகுதி நேர ஆசிரியர்களு இல்லை யா என்று கேட்கிற சரி ஏதாவது வாங்கி குடுத்தியா நீ
    நீகேட்பது ஏதும் நடப்பதில்லை அப்புரம் ஏன் இருக்க சங்கப் பொறுப்பில் இருந்து நீ போ தன்னால் நல்லது நடக்கும்

    ReplyDelete
  2. Hm kaluku salary kidaithal sari pakuthi nera aasiriyarkal yeppadi ponal avarkalukku yenna ethupola hm kalukku oru naal salary poda late aedichunna deo.aeo kitta polampuvanga yenna avangalukkuthana kastam therium 70.000 vaankikittu looty adikirathu lanch mudichathum 0ru mani neram thoonkurathu ethu mattum ella cell phonela whatsup panrathu ethellam pannuvaga part time teacherna avvalu kevalama neegalam soruthan thinkiringala ella....thinkuringala

    ReplyDelete
  3. Anaithu hm kaluku onenu sollikolkindren pira aasiriyarkalai vazhi nadatha theriyatha neengallam yentha thakuthi thervu yezhuthittu velaikku vanthinga seniyartiela vanthathal pira aasiyaroda kastam theriyala neengallam entha kaalathula erunthiruntha ungaloda vandavaalam therium pira aasiriyarkalai mathikka theriyathavar sirantha aasiriyar aaga thaguthi ellathavarnu nannool aasiriyar kooriullar....

    ReplyDelete
  4. Mr senthil neenga vaya moodikkittu erukingala ungalala kanda naeengallam part time teachera yekkathaalama parkuranga neenga eppadi ketkurathu pathividuratha ethoda niruthikkanga neega kettu yethavathu urupudiya onnenu nadakakkala appuram yen ungalukkana vilamparatha theduringa.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி