பாடங்களை இணையவழியில் நடத்த ​ உயர்கல்வித் துறை அறிவுறுத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2020

பாடங்களை இணையவழியில் நடத்த ​ உயர்கல்வித் துறை அறிவுறுத்தல்!


நடப்பு கல்வியாண்டில் முடிக்கப் படாமல் மீதமுள்ள பாடங்களை இணையவழியில் நடத்தி முடிக்க கல்லூரிகளுக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பெரும்பாலான கலை, அறிவி யல் கல்லூரிகளில் இறுதி பரு வத்துக்கான பாடங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.

இதனால் கல்லூரி தொடங்கியதும் மீதமுள்ள பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப் படுமா அல்லதுஅப்பகுதிகளை நிராகரித்துவிடுவதா என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவுகின்றன.இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கணிசமான கலை, அறிவி யல் கல்லூரிகளில் மிகக்குறைந்த அளவிலான பாடங்கள் இன்னும் மீதமுள்ளன.

அடுத்த கல்வி யாண்டு தொடங்கியதும் பாடங் களை முடித்துவிட்டு தேர்வுகளை நடத்த போதுமான அவகாசம் இல்லை.அதனால் நடப்பாண்டு மீத முள்ள பாடங்களை இணையவழி யில் நடத்த கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாண வர்களும் நன்கு படித்து தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி