பி . எப் - ல் பிறந்த தேதி சரி செய்ய ஆதார் போதும்! - kalviseithi

Apr 8, 2020

பி . எப் - ல் பிறந்த தேதி சரி செய்ய ஆதார் போதும்!பி.எப்.உறுப்பினர்களின் பிறந்த தேதி ஆவணங்களில் தவறாக இருந்தால் , ஆதார் எண்ணை கொண்டு சரிசெய்யலாம் என , வருங்கால வைப்பு நிதி கமிஷனர் விஜயானந்த் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து , அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : மத்திய அரசு அறிவித்த , 75 சதவீத முன்ப ணம் எடுக்க , திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் பி . எப் . , நிறுவனம் வெளியிட்டுள்ளது . இதற்கான வசதிகள் இணையதளத்தில் புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ளளது.

பி . எப் . , ஆவணத்தில் பிறந்த தேதியை மாற்றம் செய்ய , ஆதார் ஏற் றுக்கொள்ளப்படும் . இவ்விரண்டிலும் உள்ள தேதிகளின் வித்தியாசம் , மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக இருக்க வேண்டும் . பிறந்த தேதியை மாற்ற , ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுசார்ந்த விண் ணப்பங்கள் , உடனடியாக பரிசீலித்து நட வடிக்கை மேற்கொள்ளப்படும் . பிறந்த தேதி மாற்றுவதற்கான ஆவணங்களின் உறுதித் தன்மையை பொறுத்து , காலதாமதத்தை தவிர்க்கலாம் .

 இவ்வாறு , அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி