எதனாலே? எதனாலே? - இடி உண்டாகும்போது கடகட என உருளும் ஓசை ஏன் எழுகிறது? - kalviseithi

Apr 13, 2020

எதனாலே? எதனாலே? - இடி உண்டாகும்போது கடகட என உருளும் ஓசை ஏன் எழுகிறது?


இடி உருளும் சத்தம் கேட்பதற்கு காரணமாவது தொடர் எதிரொலிப் முறைதான். வான் மண்டலத்தில் உருவாகும் காற்றோட்டத்தால் மேகங்கள் ஒன்றை ஒன்று நெருங்கவோ விலகிச் செல்லவோ செய்கின்றன. அப்போது மின்னல் தோன்றிய மேகக் கூட்டத்திலிருந்து எழுப்பும் இடி ஓசை அருகில் நெருங்கும் மேகப் பரப்பில் மோதி எதிரொலிக்கிறது.

இந்த எதிரொலி இடி தோன்றிய மேகத்துக்குச் சென்று பலவீனம் அடைந்து மீண்டும் எதிரொலிப்பதும் உண்டு. இவற்றைத் தொடர் எதிரொலிப்பு என்கிறோம். மேகக் கூட்டங்கள் மிக நெருக்கமாக இருக்கும்போது இந்தத் தொட எதிரொலிப்புகளை பிரித்துக் கேட்க முடிவதில்லை. ஆகையால் இடி உருளுவதைப் போலவும் உறுமுவதைப் போலவும் கேட்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி