யுஜசி நெட் தேர்வுக்கான விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2020

யுஜசி நெட் தேர்வுக்கான விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.


தேசிய தேர்வு முகமையின் சார்பில் (National Testing Agency- NTA) நடப்பு ஆண்டிற்கான நெட் தேர்வு, ஜேஇஇ, ஆயுஷ் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை அறிவித்திருந்தது. இதற்கு மார்ச் இறுதிக்குள்ளும், சில தேர்வுகளுக்கு ஏப்ரல் மாதத்திலும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் NTA தேர்வுகளின் விண்ணப்பப்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, யுஜசி நெட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு மே 16 ஆம் தேதி வரையிலும், UGC CSIR NET 2020 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 15 வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வேளாண்மை படிப்புக்கான ICAR 2020 தேர்வு, இக்னோ பி.ஹெச்டி நுழைவுத்தேர்வு, விடுதி மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கான JEE 2020 தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை ஆயுஷ் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்க மே 31 ஆம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Exams Postponed 2020: National Testing Agencyy (NTA) எனப்படும் தேசிய தேர்வு முகமை, இந்தாண்டுக்கான நெட் தேர்வு (NET 2020), ஜேஇஇ (JEE 2020), ஆயுஷ் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப்பதிவு இம்மாத இறுதியிலும், சில தேர்வுகளுக்கு ஏப்ரல் மாதத்திலும் முடிவடைவதாக இருந்தது. தற்போது இந்த விண்ணப்பப்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

யுஜசி நெட் தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்பப்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. National Testing Agency (NTA) எனப்படும் தேசிய தேர்வு முகமை, இந்தாண்டுக்கான நெட் தேர்வு, ஜேஇஇ, ஆயுஷ் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப்பதிவு இம்மாத இறுதியிலும், சில தேர்வுகளுக்கு ஏப்ரல் மாதத்திலும் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு உத்தரவு காரணத்தினால், NTA தேர்வுகளின் விண்ணப்பப்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, யுஜசி நெட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு மே 16 ஆம் தேதி வரையிலும், UGC CSIR NET 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 15 வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை படிப்புக்கான ICAR 2020 தேர்வு, இக்னோ பி.ஹெச்டி நுழைவுத்தேர்வு, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கான JEE 2020 தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதுநிலை ஆயுஷ் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 ஆம் வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

NTA 2020 Postponed Official PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி