ஆசிரியர்கள் தேவைப்பட்டால் கொரானா பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2020

ஆசிரியர்கள் தேவைப்பட்டால் கொரானா பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!


ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 4 பேர்தான் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியில் தேவைப்பட்டால் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். மேலும் 29-ந் தேதிக்கு பிறகு முதல்-அமைச்சர் மற்றும் உயர்மட்ட குழுவின் ஆலோசனை பெறப்பட்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடத்தப்படும்.

மேலும் நடந்து முடிந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

11 comments:

  1. 2013 TeTPass செய்தவங்க எல்லாரும் மேல போயிற்றோம் கொரானா கணக்குலே சேத்துடு

    ReplyDelete
  2. Sir part time teachers ku yedhachum help panuga sir April May month salaryku

    ReplyDelete
  3. தற்காலிக இடைநிலை ஆசிரியர் நீட்டிப்பு
    செய்யுங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. Apoo Tet pass pannavangalukku enna vazhi....

      Delete
  4. இந்த அரசுக்கு ஆசிரியர்கள் மீது ஒரு கண்ணுதான்.

    ReplyDelete
  5. பல தனியார் பள்ளிகளில் மார்ச் மாத ஊதியம் இன்றுவரை கொடுக்கவில்லை. மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்ச் மாத ஊதியம் கிடைக்காத பாவப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்கிறோம் .

    ReplyDelete
    Replies
    1. Cmcell vailaga unga school mention panni complaint panuga in ur name or you Friend name

      Delete

  6. தனது உயிரையும்
    பொருள்படுத்தாமல் கொரோன ஒழிப்பு பணியில் ஈடுபடும் மருத்துவத்துறை
    உள்ளாட்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை ஆகிய களப்பணியாளர்களுக்கு இரண்டுமாத ஊதிம் வழங்கலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி