ஆசிரியர்கள் அவதி - தனியார் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதச் சம்பளத்தை இதுவரை வழங்கவில்லை! - kalviseithi

Apr 17, 2020

ஆசிரியர்கள் அவதி - தனியார் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதச் சம்பளத்தை இதுவரை வழங்கவில்லை!தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கும், அவர்கள் பணிசெய்யும் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதச் சம்பளத்தை இதுவரை வழங்கவில்லை. இதனால் அவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் காரணமாக மே 3-ம் தேதி வரை இரண்டாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பணி செய்ததற்கான சம்பளத்தை பல தனியார் பள்ளிகளும், ஆசிரியர்களுக்கு இன்னும் வழங்கவில்லை என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

ஏற்கெனவே மிகக்குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் இவர்களுக்கு இது பெரும் சிரமத்தைக் கொடுத்திருக்கிறது. மார்ச் மாதச் சம்பளத்தையே இதுவரை வழங்காத நிலையில், ஏப்ரல் மாதச் சம்பளத்தையும் அரசு உறுதி செய்துதர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் ஆசிரியர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் கனகராஜ் கூறுகையில், “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சுயநிதிப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுயநிதிப் பிரிவுகளிலும் எவ்விதப் பணிப் பாதுகாப்புமின்றி பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இது வருத்தத்துக்கு உரியது.

ஊரடங்கால் கடுமையான சமூக, பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அந்த ஆசிரியர்களுக்கு மார்ச் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு நேரடியாகத் தலையிட்டு, ஊதியம் வழங்காத பள்ளி நிர்வாகங்களை உடனடியாக ஊதியம் வழங்க நிர்பந்திக்க வேண்டும்” என்றார்.

21 comments:

 1. Why are you send fake news and spoil private school image

  ReplyDelete
  Replies
  1. No its correct news.i am disabled person.i am not get selary

   Delete
  2. I am working private school.

   Delete
  3. Sss engalukum salary innum varala we are 15 teachers
   Kudukarathu 4500 Ithula athayum kuduka matranuga

   Delete
  4. D.e.o selary list submit pannanum compulsory nu sonna selary kidaikum

   Delete
  5. It's happening in many schools, Some schools gave 50% of salary, Some schools are telling to get salary when we will return to school,Many schools not yet gave salary...

   Delete

 2. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
  அனைத்து தனியார் பள்ளிகளிலும் கொரொனா விடுமுறை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சம்பளம் போட மாட்டார்கள். ஆகையால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ReplyDelete
 3. Apadiyae after lockdown private teachers canvass poga kudathunu order podunga

  ReplyDelete
  Replies
  1. இது வேற நடக்குதா?

   Delete
  2. Don't work in such a school, It's not a teacher's duty, you ask to come School owners for Canvas work,

   Delete
  3. அப்படி சொன்னால் உனக்கு இங்க வேலை இல்லை வேறு பக்கம் பார்த்துக்கொள் என்கின்றனர்

   Delete
 4. Apadiyae after lockdown private teachers canvass poga kudathunu order podunga

  ReplyDelete
 5. Am also waiting for the salary in the month of March....
  & Rani pettai district &

  ReplyDelete
 6. Few schools paid dalary properly, pls mention the school name if they didn't gove salary

  ReplyDelete
 7. March month half salarudan koduthsnga nangalam intha salaryadan enga family run panna delend panni irumom April month athum podamatanga ena panrayhune theriyala so pls government ethathu action edutha engaluku konjam usefulla irukum ilana sapatuke kastapaduramatri agidim so pls take necessary action to get salary for april pls

  ReplyDelete
 8. எங்களுக்கு மார்ச் மாத சம்பளத்தில் பாதி தான் கொடுத்தார்கள் பாக்கி தொகையை 144 தடைக்காலம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டனர். எப்பொழுதும் மே மாதத்திற்கு சம்பளம் வழங்க மாட்டார்கள் . ஆனால் ஆடிட்டிங் செய்யும் போது மே மாதம் சம்பளம் கொடுத்த மாதிரி கணக்கு காண்பித்துக் கொள்வர் . இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட சுயநலத்தோடு இருக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரை என்ன தான் சொல்வது . மீறி எங்களுடைய கருத்தை கூறினால் வேறு பள்ளியில் சென்று பணியாற்றிக் கொள்ளுங்கள் என்கின்றனர் . இதற்கு கடவுள் தான் ஒரு வழி காட்ட வேண்டும் .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி