ஆன்லைன் மூலமாக தினமும் தேர்வு நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2020

ஆன்லைன் மூலமாக தினமும் தேர்வு நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்!


அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக, தினமும் ஆன்லைன் தேர்வு நடத்தி, அதற்கான சான்றிதழ்களையும் உடனுக்குடன் வழங்கி அசத்துகிறார்.தனியார் பள்ளிகள் அனைத்தும் ஊரடங்கு அறிவித்தது முதலே, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சிகளை துவங்கிவிட்டன.

இதன்மூலம், மாணவர்களுடன், 'வீடியோகால்' வடிவில் ஆசிரியர்கள், நேரடியாக உரையாடி வருகின்றனர். அரசு பள்ளிமாணவர்களுக்கும் இதை சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஹரிஹரன்.

அவர் கூறியதாவது:

தற்போது, ஒரு மாதம் இடைவெளி விட்டதால் படித்ததை எல்லாம் மாணவர்களுக்கு திரும்ப நினைவு படுத்த வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சேனல், இ-புத்தகம், கல்வி இணைய தளம் மூலம் பாடங்களை படிக்க அரசு வசதி செய்தது.ஆனாலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு 'வீடியோ கால்' வடிவில் கிடைக்கும் ஆசிரியரின் நேரடி கவனிப்பு கிடைக்கவில்லை.எனவே, நானே களத்தில் இறங்கினேன்.

ஜூம் வீடியோகாலில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கத்துவங்கினேன். மேலும் ஆர்வத்தை துாண்ட, வினாத்தாள்களை, 'குவிஸ்' வடிவில் தயாரித்து அதன் லிங்கை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிடுவேன். இதில், மாணவர்கள் உள்ளே நுழைந்ததும், கேள்விகள் வரும். பதிலளித்து முடித்ததும் அதற்கான மதிப்பெண் விவரம், பாராட்டு சான்றிதழ் வடிவில் உடனுக்குடன் திரையில் தோன்றும்படி வடிவமைத்தேன். இதற்கு மாணவர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

7 comments:

  1. How to make that certificate to students that you have mentioned here?I also want to encourage my students.

    ReplyDelete
  2. ம.நா.உ.ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு தினமும் வாட்ஸ் அப் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. உடனே பேப்பர் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. Government kudukara salary ku vela seithu thaaneee aaganum...

      Delete
  3. How to do this? If you explain it will be useful for many

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே..zoom app பாதுகாப்பற்றது என அரசு தெரிவித்துள்ளது.கவனமாக கையாளவும்.உங்களின் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Congrats Sir.. Keep rocking! This is our service to government school students... God bless you abudently. We do this class and test through whatsapp group only. But this through zoom, student will more interested Right!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி