மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பு ‘பாஸ்’ வசதி தமிழக அரசு ஏற்பாடு! - kalviseithi

Apr 9, 2020

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பு ‘பாஸ்’ வசதி தமிழக அரசு ஏற்பாடு!


தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் சி.விஜயராஜ்குமார் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாற்றுத் திறனாளிகள் பலர், அவர்களின் தினசரி செயல்பாட்டுக்கு உதவும் நபர்களை ஊரடங்கு உத்தரவினால் வரவழைக்க முடியவில்லை என்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீடுகளுக்கு வந்து அவர்கள் தெரபி போன்ற மருத்துவ உதவிகளை செய்து வந்தவர்களாகும்.எனவே மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் தெரபி போன்ற மருத்துவ உதவிகளைச் செய்யும் ‘கேர் கிவ்வர்’ என்பவர்களுக்கு போக்குவரத்துக்கான பாஸ்களை வழங்கலாம்.

அதற்கு முன்பு இதுபோன்ற நபர்களை தினசரி நம்பி, அவசர உதவிகளை நாடும் மாற்றுத் திறனாளிகளின் புகைப்படத்துடன் கூடிய கோரிக்கை மனு, தேசிய அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிக்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல் போன்றவற்றை மாவட்ட கலெக்டர் அல்லது சென்னை மாநகராட்சி ஆணையருக்கு (சென்னையில் வசிப்பவர்கள்) அனுப்பி வைக்க வேண்டும்.இந்த பாஸ்களை வழங்குவதற்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள்நல அதிகாரிகள் உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி