தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை சரியாக வழங்க வேண்டும் - கல்வித்துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2020

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை சரியாக வழங்க வேண்டும் - கல்வித்துறை!


'தனியார் பள்ளிகள், தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாக்கியில்லாமல், ஊதியத்தை வழங்க வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா பிரச்னையால், நாடு முழுதும் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை, ஒரு மாதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால், வழக்கமான செலவுகள் குறைந்துள்ளன.அதேநேரம், மாணவர்களிடம் மூன்றாம் பருவ கட்டணம், ஏற்கனவே வசூலிக்கப்பட்டு விட்டது.ஆனால், மற்ற தொழில்களை போல, தங்களுக்கும் வருவாய் குறைந்து விட்டதாக கூறி, சில பள்ளிகளில், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படவில்லை என, கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன.

இது குறித்து, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியாக, தனியார் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

கொரோனாவை காரணம் காட்டி, தனியார் பள்ளிகள், தங்களின் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மாத ஊதியத்தை தராமல் பாக்கி வைக்கக்கூடாது. அவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ஊதியத்தை, குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும். அந்த விபரத்தை, பள்ளி கல்வி துறைக்கும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

23 comments:

  1. ஆனால் இன்னும் பல பள்ளிகளில் பெப்ரவியி சம்பளம் கூட தர வில்லை மார்ச் மாத சம்பளம் தரப்படவில்லை என்ன செய்வது

    ReplyDelete
  2. Pasanga fee pay pannunale samplam tharamatanunga ipa fee collect agathu aprm epdi tharuvanga itha solliye emathuranga

    ReplyDelete
  3. அரசு அறிவிப்பை ஏற்று அனைத்து தனியார் பள்ளிகளும் மாத சம்பளம் சரியாக தர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அது நடக்காது நிச்சயமாக நடக்காது இந்த அறிவிப்பு தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு நாதம் போல . கனவிலும் கூட சம்பளம் தர மாட்டார்கள் .

      Delete
  4. மார்ச் சம்பளம் வரவில்லை

    ReplyDelete
  5. இந்த அறிவிப்பு ஏட்டுச் சுரைக்காய் போன்றது கறிக்கு உதவாது. நீங்கள் என்னதான் அறிவிப்பு வெளியிட்டாலும் கிணற்றில் போட்ட கல்லாகத்தான் இருக்குமே தவிர ஒரு முன்னேற்றமும் ஏற்படாது . நிர்வாகத்தினர் சம்பளமும் தரப்போவது இல்லை . எதற்கு இந்த அறிவிப்பு விழலுக்கு இறைத்த நீர் போன்றது.

    ReplyDelete
  6. இந்த அறிவிப்பு ஏட்டுச் சுரைக்காய் போன்றது கறிக்கு உதவாது. நீங்கள் என்னதான் அறிவிப்பு வெளியிட்டாலும் கிணற்றில் போட்ட கல்லாகத்தான் இருக்குமே தவிர ஒரு முன்னேற்றமும் ஏற்படாது . நிர்வாகத்தினர் சம்பளமும் தரப்போவது இல்லை . எதற்கு இந்த அறிவிப்பு விழலுக்கு இறைத்த நீர் போன்றது.

    ReplyDelete
  7. செயல் படுத்த முடியா ஒரு அறிவிப்பு வந்தால் அது அரசாங்கத்தின் இயமாமை தானே ஒழிய வேறில்லை . தனியார் பள்ளிகள் இஷ்டம் போல் நடந்து கொண்டால் எங்கோ தவறு நடக்கிறது . பஞ்சத்தின் மூலம் பள்ளிகளின் காரியங்கள் வெற்றி பெறுகிறது.சம்பளம் கொடுக்க மறுக்கிறவர்கள் லஞ்சம் கொடுக்க மறுப்பதில்லை..matric. பள்ளிகளை கண்காணிக்கும் கல்வித்துறை பணியாளர்களுக்கு என்றும் பன மழை தான் !

    ReplyDelete
  8. சில பள்ளிகளில் சம்பளம் தந்தமாதிரி கணக்கு காட்டுராங்க?

    ReplyDelete
  9. We didnt get salary past three month ..ethellam yarukitta solla mudium ...private schools salary podurangalanu concern DEOAnd CEO confirm pannamae avangaluku private schoola iruthu money kuduthu samalachuruvanga...naanga three montha salary illamae rombha kastathulae irukuom nu already chennai CEO ku education secretary and education ministry ku mail panni no use ...

    ReplyDelete
  10. In kumbakonam some school gave half salary.

    ReplyDelete
  11. தனியார் கல்லூரியின் ஆசிரியர்களின் ஊதியத்தை மறந்துவிட்டீர்கள்?????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி