எதனாலே? எதனாலே? - குளிர்சாதனப் பெட்டியை அப்படியே வீட்டினுள் திறந்து வைத்தால் வீடு முழுவதும் குளிர்ச்சி ஆகிவிடுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2020

எதனாலே? எதனாலே? - குளிர்சாதனப் பெட்டியை அப்படியே வீட்டினுள் திறந்து வைத்தால் வீடு முழுவதும் குளிர்ச்சி ஆகிவிடுமா?


குழாயில் ஓடும் அழுத்தப்பட்ட ப்ரியான் திரவம் பெட்டியினுள் சென்று வெப்பத்தை ஏற்று விரிவடைந்து வாயுவாக மாறுகிறது. அப்போது குளிர்சாதனப் பெட்டியினுள் இருக்கும் பொருள்கள் குளிர்வடைகின்றன. இவ்வாறு விரிவடைந்த ப்ரியான் வாயுவை மீண்டும் அழுத்தி திரவமாக்கும்போது வெப்பம் உண்டாகிறது.

இது பெட்டியின் வெளிப்புறமுள்ள வெப்பமாற்றி வழியாக அகற்றப்படுகிறது. இந்த வெப்பம் வீட்டிலுள்ள காற்றோட்டத்தில் பரவி விடுகிறது. குளிர்சாதனப் பெட்டியை சற்றுநேரத்துக்கு திறந்து வைக்கும்போது அதிலிருந்து குளிர்ச்சியான காற்று வெளிப்படும். ஆனால் தொடர்ந்து அப்படியே திறந்து வைத்தால் குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலை உயர்ந்து அது அறை வெப்பநிலைக்கு வந்துவிடும்.

இதனால் அறையும் குளிராது, பெட்டியில் இருக்கும் பொருள்களும் குளிர்ச்சியடையாது. மின்சார விரயம்தான் மிச்சம். குளிர்சாதனப் பெட்டியின் பின்புறமுள்ள வெப்பமாற்றியை சன்னலில் பொருத்தி வெளிக்காற்று அறையில் உட்புகா வண்ணம் வைத்து பெட்டியை திறந்து வைத்தால் வீடு குளிர்வடையும். இது தான் ஏர்கண்டிஷனரின் தத்துவமும் கூட.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி