ஆன்லைன் மூலம் 12-ம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தம்? - kalviseithi

Apr 15, 2020

ஆன்லைன் மூலம் 12-ம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தம்?


ஆன்லைன் மூலம் 12-ம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு 02.03.2020 ல் தொடங்கி மார்ச் 24-ம் தேதி முடிந்தது. இத்தேர்வினை 8 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ல் வெளியாவதாக இருந்தன.

சீனாவில் தொடங்கிய உயிர்க் கொல்லி நோயான கரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி வருகிறது. கரோனாவால் 18 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் சமூகக் கூடல் மூலம் பரவாமல் தடுக்க 21 நாள்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவர்களும் பெற்றோர்களும் தேர்வு முடிவு எப்போது வரும், மேற்படிப்பு என்னவாகும் என்று குழப்பத்தில் உள்ளனர்.

12-ம் வகுப்புப் பொதுத்தேர்வின் விடைத்தாள்களைத் தற்போது திருத்த முடியாத சூழல் உள்ளதாலும், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகும் கரோனா பரவலைத் தடுக்க சமூகக் கூடலைத் தவிர்த்திடவேண்டும் என்பதாலும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வின் தேர்ச்சி முடிவு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

ஆகையால் பள்ளிக் கல்வித்துறை 12-ம் வகுப்பு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினி மூலம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதன் பிறகு ஆன்லைன் மூலம் விடுமுறைக் காலத்திலேயே ஆசிரியர்கள் வீட்டிலிருந்தேபடியே விடைத் தாள்களைத் திருத்தம் செய்தால் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

ஆகையால், விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக திருத்தம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

11 comments:

 1. முட்டாள்தனமான யோசனைகள்.
  கல்லூரி தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ள போது கல்லூரி திறப்பும் தள்ளி போகும். ஏன் இந்த அவசரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 10ஆம் வகுப்பு தேர்வு நடத்தி முடிவு வந்தால் தான் 11க்கு பாடம் நடத்தலாம் அது வரை பொறுமையாக இருக்க வேண்டும்

  ReplyDelete
 2. ஏன் இந்த தேவையில்லாத அவசரம்.ஆசிரியர் சங்கம் அரசுக்கு சரியான யோசனைகளை தெரிவிக்கட்டும்.

  ReplyDelete
 3. En indha sangam kevalamana mudivai yosikkirathu.

  ReplyDelete
 4. Corona happy news only govt teachers, no work , gain salary, idilla puthu puthu technique la work illama parka try

  ReplyDelete
 5. Ada aramentalgala online la pandradha irudhalum oru podhuvana place la paper la scan panitu adhala andha secure place la iruka system la upload panuvaga adhu system la maintain panuvaga paper valuation social distance use pani paper correction nadakum corona affect agadha place la iruka schools la centre ah vachi work panalam indha problem la solve ana work overload ah irukadhu neraya college la idha dhan follow pandraga yendha fraud velaikum idhula onnu illa papers are maintained in online ne yepo vena amount pay pani check panikalam advance yosicha adhuku konjamachum support panuga summa medhaviga pola teachers naley thappa pesadhiga techers illana indha society la ipadi vandhu vakanaya comments poda mudiyadhu.

  ReplyDelete
 6. This method is impossible and make so many confussions. Our Govt do not follow this method.

  ReplyDelete
 7. Senseless teachers association

  ReplyDelete
 8. ada mutta koomutta.... 10 lacham paper ku mela papers iruku, eppo upload panni download panni verfy panni

  ReplyDelete
 9. யாவற்றையும் ஆன்லைனிலேயே அரங்கேற்றும் கலாச்சாரம் பெருகி வருவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் பீதி கிளப்புவதாக இருக்கிறது.

  ReplyDelete
 10. Mr.p.k Ilamaran, muhamad bin thughlaq unga kitta thothu poiduvaaru pola....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி