ஆசிரியா்களுக்கு சம்பளம் வழங்கும் பணி: அதிகாரிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2020

ஆசிரியா்களுக்கு சம்பளம் வழங்கும் பணி: அதிகாரிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்


அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு சம்பளம் வழங்கும் பணிகளைமேற்கொள்வது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை தரப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியா்கள், கல்வித்துறை அதிகாரிகள் வீட்டிலிருந்தபடியே பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு கடந்த மாா்ச் மாத சம்பளம் வழங்குவதில்பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதைத் தவிா்க்கும் வகையில், ஏப்ரல் மாத சம்பளப் பட்டியலைத் தயாா் செய்து, கருவூலகங்களில் சமா்ப்பிக்கும் பணிகளை, தற்போது விரைவாக முடிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதற்கு ஏதுவாக மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டாரக் கல்விஅதிகாரிகள், தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட பணம் பெற்று வழங்கும் அதிகாரம் கொண்ட அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து அலுவலகம் சென்றுவர அனுமதி வழங்கப்படுவதாகவும்,ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் சம்பளப் பட்டியல் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்வதுடன், கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் வழியாக துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

3 comments:

  1. What about private school teachers....we are suffering to get our salary... still I didn't get my march month salary...I just intimating My personal worries...

    ReplyDelete
  2. தயவுசெய்து தனியார் பள்ளி ஆசிரியர்களையும் கவனத்தில் கொண்டு அரசு இதற்கு ஒரு வழி காண வேண்டும்.

    ReplyDelete
  3. We don't know when would be this problem COVID 19 ends....Until then we (privaya school ) teachers salary ??? Very difficult..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி