அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது - ஸ்டாலின் எதிர்ப்பு! - kalviseithi

Apr 28, 2020

அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது - ஸ்டாலின் எதிர்ப்பு!இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நோய் தொற்று பேரிடர் அறிவிக்கப்பட்டவுடன் ஒருநாள் ஊதியததை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் வழங்கியதாகவும், கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியற்றி வருவதகாவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் 18 மாத அகவிலைப்படி, 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை ஓராண்டிற்கு நிறுத்தி வைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி குறைப்பு போன்ற நடவடிக்கை அவர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் இழக்க செய்யும் என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கை நிதி மேலாண்மை படுக்குழிக்குள் தள்ளப்பட்ட விட்டது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதிக்கமிஷன் பகிர்வு போன்ற நிதியை அழுத்தம் கொடுத்து உடனே பெற வேண்டும் என்றும்

அதைவிடுத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

5 comments:

 1. நானும் அரசு உதவியாளர் தான் முப்பது நாள் சம்பளம் பிடித்தம் செய்வதற்கு எனக்கும் விருப்பம். வீட்டிலேயே உட்கார்ந்து முழு சம்பளம் வாங்குதில் எனக்கு உருத்துகிறது. மருத்துவ பணியாளர்கள், போலிஸ், தூய்மை பணியாளர்கள் போன்ற களப்பணி செய்பவர்களுக்கு தயவு செய்து முழு சம்பளம் கொடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. அய்யா நீங்க‌ள் தாராள‌மாக‌ 30 நாள் ம‌ட்டும‌ல்ல‌ ஊர‌ட‌ங்கு மொத்த‌ நாட்க‌ளின் ச‌ம்ப‌ள‌த்தையும் கொடுக்க‌லாம்..தாராள‌மாக‌...
   ஆனால் விரும்பிக் கொடுப்ப‌தும் க‌ட்டாய‌ப்ப‌டுத்தி ப‌றிப்ப‌தும் ஒன்ற‌ல்ல‌...
   அப்புற‌ம் ச‌ம்பள‌ம் கோடி வாங்கினாலும் த‌வ‌றில்லை..ஆனால் இல‌ஞ்ச‌மாக‌ ஒரு ரூபாய் வாங்கினாலும் மாபெரும் த‌வ‌று...
   த‌ய‌வு செய்து உங்க‌ளின் பெய‌ர் அலுவ‌ல‌க‌ விவ‌ர‌ம் அளித்தால் ந‌ல்ல‌து..ஏனென்றால் த‌ங்க‌ளைப் போன்றோர்க‌ளின் சேவை ம‌ற்றும் தாராள‌ ம‌ன‌தை ஊட‌க‌ங்க‌ளுக்கு அடையாள‌ம் காட்ட‌வே...செய்வீர்க‌ளா?...

   Delete
  2. Super.அருமையான பதிலடி.Fake id முகமூடியை கிழித்து விட்டீர்கள்.

   Delete
 2. friends இந்த Unknown பதிவு பற்றி குழம்ப வேண்டாம்.. இந்த Unknown மனநோயாளி பெயர் பழையகஞ்சி பழனியப்பன் .. அடுத்தவர்களை சீண்டிவிட்டு பல்லைக் காட்டும் மனநோயாளிகள் சங்கத்தின் வட்ட செயலாளன்.. டேய், நீ அரசு உதவியாளரா.. மனநோயாளி.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி