இன்ஜி., மாணவர்களுக்கு கட்டண பாக்கி கல்வி துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு - kalviseithi

Apr 21, 2020

இன்ஜி., மாணவர்களுக்கு கட்டண பாக்கி கல்வி துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு


கல்வி கட்டண சலுகை பெற்று படிக்கும், இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கான கட்டணத்தை, மாநில அரசுகளிடம் பெற்று, கல்லுாரிகளுக்கு வழங்கும்படி, உயர் கல்வித் துறைக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தியுள்ளது.அரசு ஒதுக்கீட்டில்,இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேரும் மாணவர்களிடம்,குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

அதிலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரான, பட்டியலின மாணவர்களுக்கு, கல்வி கட்டணத்தில் முழு சலுகை அளிக்கப்படுகிறது.இந்த மாணவர்களுக்கான கட்டணம், மத்திய, மாநில அரசுகள் சார்பில், சம்பந்தபட்ட கல்லுாரிகளுக்கு வழங்கப்படும்.நடப்பு கல்வி ஆண்டில், இந்த சலுகையில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை, தனியார் கல்லுாரிகளுக்கு அரசு இன்னும் வழங்கவில்லை.அதனால், ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் பிரச்னை உள்ளதாக, கல்லுாரிகள் புகார் தெரிவித்துள்ளன.

இது குறித்து, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், மாநில உயர் கல்வித்துறை செயலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 'தனியார் கல்லுாரிகளின் பொருளாதார நிலை கருதி, அரசின் சமூக நலத்துறை பாக்கி வைத்துள்ள கட்டணத்தை தாமதமின்றி பெற்று, கல்லுாரிகளுக்கு வழங்க வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கைகளை, உயர் கல்வித்துறை மேற்ெகாள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி