எதனாலே? எதனாலே? - கதிரவப் புள்ளிகள் என்றால் என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2020

எதனாலே? எதனாலே? - கதிரவப் புள்ளிகள் என்றால் என்ன?

கதிரவனின் புறப்பரப்பில் அவ்வப்போது கருந்திட்டுகள் உண்டாகின்றன. அவை சிறு கூட்டங்களாகப் பார்ப்பதற்கு புள்ளிகள் போல் தோற்றமளிக்கின்றன. இவற்றிற்கு கதிரவப்புள்ளிகள் ( sun spots ) எனப் பெயர். இந்தக் கதிரவப் புள்ளிகள் உள்ள பகுதி சற்றுக் குளிர்ந்து அதன் வெப்பநிலை சுமார் 4000° செல்ஷியஸ் அளவில் இருக்கும். மற்ற பகுதிகளின் சராசா வெப்பநிலை 6000° செல்ஷியஸ்.

இந்தக் கதிரவப் புள்ளிகளின் மையப் பகுதி கறுத்தும் வெளிச் செல்லச் செல்ல கறுமை குறைந்தும் காணப்படுகின்றன. 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவற்றின் எண்ணிக்கை உச்சத்தை அடைகின்றன. இதன் விளைவாக பூமியின் துருவப் பகுதிகளில் சிலசமயம் ' துருவ ஒளி ' ஏற்படுவது உண்டு. வானொலி தகவல் தொடர்பும் சில மணித்துளிகள் இதனால் பாதிப்படைவது உண்டு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி