Flash News : தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியான இன்றைய பாதிப்பு பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2020

Flash News : தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியான இன்றைய பாதிப்பு பட்டியல் வெளியீடு.


தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக குறைந்து காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் அதிகரித்துள்ளது.

இதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 50 பேரும்,  அதற்கடுத்ததாக தஞ்சையில் 10 பேரும் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரிப்பு என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மாவட்ட வாரியான இன்றைய பாதிப்பு பட்டியல்:

1 comment:

  1. *ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டு (2020-21) பட்ஜெட்டில் மாத ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை*


    தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தணிக்கை மற்றும் கணக்கு மேலாளர், கணக்காளர்கள், மாவட்ட மற்றும் வட்டார கணினி விவரப் பதிவாளர்கள், தகவல் நிர்வாக மேலாண்மையாளர்கள், கணிணி வகைப்படுத்துனர், மற்றும் கட்டிட பொறியாளர், உள்ளிட்ட சமக்ரா ஷிக்ஷா திட்ட தொகுப்பூதியத்தில் ஏறக்குறைய 1500 மேற்ப்பட்ட பணியாளர்கள் பல ஆண்டுகளாக மிகக் குறைந்த சம்பளத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தத் திட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRD) திட்ட ஒப்புதல் வாரியத்தின் (PAB) சம்பளம் வழங்கப்படவில்லை.
    தற்போது வழங்கப்படும் ஊதியத்தால் இவர்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய இயலவில்லை. இவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் மருத்துவ செலவுகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
    உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் பணிக்கு சமமான ஊதியத்தை அமல்படுத்த பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அலுவலக சுற்றறிக்கை (Memorandum) வெளியிட்டது. சமக்ரா சிக்‌ஷாவில் வெவ்வேறு மாநிலங்களில் ஒரே பதவியின் சம்பளங்களில் ஊதிய வேறுபாடு உள்ளது.எனவே மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் தயவுசெய்து MHRD ஒப்புதல் அளித்த PAB சம்பளத்தை மேலே குறிப்பிட்டவர்களுக்கு நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதியத்தினை ஊழியர்களுடைய வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தற்போது 2020- 21 (AWP& B) நிதி ஆண்டு பட்ஜெட்டிலும் தயவு செய்து இதை உடனடியாக அமல்படுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

    இந்தக் கடிதத்தில் பணியாளர்களின் மாநில அளவில் சம்பள ஒப்பீட்டு விவரங்களையும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அலுவலக சுற்றறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

    திரு. பி.கே. இளமாறன்
    மாநிலத் தலைவர்
    தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி