Science Fact - நம் கை, கால்களிலுள்ள விரல்கள் எல்லாம் ஒரே அளவாக இல்லாமல், வெவ்வேறு அளவில் அமைந்துள்ளதற்கு என்ன காரணம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2020

Science Fact - நம் கை, கால்களிலுள்ள விரல்கள் எல்லாம் ஒரே அளவாக இல்லாமல், வெவ்வேறு அளவில் அமைந்துள்ளதற்கு என்ன காரணம்?


நம் கை, கால்களிலுள்ள விரல்கள் எல்லாம் ஒரே அளவாக இல்லாமல் வெவ்வேறு அளவில் அமைந்துள்ள காரணத்தால்தான் நாம் பல வேலைகளை எளிதாக செய்ய முடிகிறது. கால் விரல்களை விடக் கைவிரல்களின் அளவு அதிகம் வேறுபட்டு இருப்பதும் தன்னிச்சையாக ஒவ்வொன்றும் அசைவதும் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடர்ச்சியாக நடைபெற்ற மனித பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட முக்கியமான ஒரு மாற்றமாகும்.

( நம் கால் விரல்களைத் தன்னிச்சையாகத் தனித்தனியாக அசைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் ) முன் இணை உறுப்புகளைக் கைகளாகப் பயன்படுத்த பயன்படுத்த மனிதன் கருவிகளைப் பயன்படுத்தும் விலங்காக ( Tool using animal ) உருவானான்.

பின்னர் மற்ற விலங்கிலிருந்து வேறுபட்டு நின்றதோடு , பல்வேறு கட்ட வளர்ச்சியோடு மனிதனாகப் பரிணமித்து இருக்கிறான். இன்று மனிதன் , விரல் நுனியில் மண்ணையும் விண்ணையும் தன் ஆளுமைக்குக் கீழ் கொண்டுவந்து இருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட முடிகிறது.

1 comment:

  1. விண்வெளி மற்றும் பூமியின் சுழற்சி தொடர்பான செய்திகளை வெளியிட வேண்டுகிறேன். நன்றி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி