இணையம் இல்லையென்றால் இவ்வுலகம் இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொழில் முதல் பொழுதுபோக்கு வரை என அனைத்திற்கும் தற்போது இணையத்தையே நம்பி உள்ளனர்.
அவர்களின் இணைய வேகத்தை அதிகரிக்க இதுவரை 2ஜி,3ஜி, 4ஜி சென்று தற்போது 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு நொடிக்கு 1000 HD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் அளவிற்கு இணைய வேகம் ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள மொனாஷ், ஸ்வைன்பேர்ன் மற்றும் RMIT ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த அதிவேக இணையம் நொடிக்கு 44.2 டெரா பைட்ஸ் ( TBps) வேகத்தில் செயல்படும். இன்னும் தெளிவாக கூறினால் இந்த அதிவேக இணையத்தின் மூலம் விநாடிக்கு 1000 HD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.
பொதுவாக இணைய வேகத்திற்காக கண்ணாடி சிப் ஒன்றில் வழக்கமாக 8 லேசர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் ஆனால் இதில்லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப் என்கிற புதிய சாதனத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதால் இந்த அதிவேக இன்டர்நெட் சாத்தியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் இணையத்திற்கு அதிக தேவைகள் ஏற்பட்டு இந்த நேரத்தில் இந்த அதிவேக இணையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Korna ku mardhu kandu pidikada kumutaigala eppudi panam sambaraikalam mattum think pandringa
ReplyDelete