10 வகுப்பு மாணவர்களை தேர்வு எழுதுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் - முதல்வர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2020

10 வகுப்பு மாணவர்களை தேர்வு எழுதுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் - முதல்வர்


இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது;

* தமிழ்நாட்டில் விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. விவசாய விலை பொருட்கள் போக்குவரத்துக்கு தடை இல்லை.

* சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

* மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிர நிலையில் உள்ளது.

* மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.

* தமிழகத்தில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை.

* கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படும் என முன்பே கணித்து அரசு எச்சரிக்கை விடுத்தது. எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் ஏற்கவில்லை.

* சென்னையில் இருந்து சென்றவர்களால்தான் மற்ற பகுதிகளில் கொரோனா பரவியது. கோயம்பேடு சந்தைக்கு 20 ஆயிரம் பேர் சென்று வந்துள்ளனர்.

* மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

* சென்னையில் நெரிசலான பகுதிகளில் 26 லட்சம் மக்கள் வசித்து வருகின்றன.

* தமிழகத்தில் அரசின் முயற்சியால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

* அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம்.

* பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சுலபமல்ல.

* வெளியில் செல்லும் போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

* தமிழகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறோம்.

* 10 வகுப்பு மாணவர்களை தேர்வு எழுதுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பேருந்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

* படிப்படியாக அனைத்து தொழிலாளர்களும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

* பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்த பிற இடங்களில், 50 சதவீத தொழிலாளர்களுடன், தொழிற்சாலைகள் இயங்கலாம்.

* விதிகளை மீறி சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 நாட்கள் கழித்து திறக்கலாம்.

* அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு.

* கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

* அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பாராட்டு

3 comments:

  1. Muthalvar avargalathu mudivu nalla mudivaga irukkattum.sonna thethiyele exam kandippaga vaikka vendum.ayya avargalukku mikka nandri.thervu thethiyai veliyittathargu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி