தமிழக அரசுப் பள்ளிகளில் 10% மாணவர்கள் அதிகரிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2020

தமிழக அரசுப் பள்ளிகளில் 10% மாணவர்கள் அதிகரிக்கலாம்!


கரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் வேலை முடக்கத்தால் அனைத்துத் தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சிலருக்கோ மாதச் சம்பளத்தில் பிடித்தம், சிலருக்கோ வருமான இழப்பு, சிலருக்கோ வேலையிழப்பு, பலருக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. இது குழந்தைகளின் கல்வியில் உடனடியாக எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இதுவரை அதிகம் செலவழித்து தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைத்த நடுத்தர குடும்பத்துப் பெற்றோர் பலர் அரசுப் பள்ளிகளைத் தேடி வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் மொத்தம் 45 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வகுப்பு வரையில் 67 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் கூடுதலாக 10 சதவீதம் வரை மாணவ சேர்க்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மாணவர் சேர்க்கையை தற்போது நடத்தக்கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளை நாடி வரும் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும்படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர் கழகத் தலைவர்கள் சிலருடன் உரையாடினோம்.

தகுதியான ஆசிரியரும் ஆங்கில வழிக் கல்வியும்!

"ஊரடங்கு காலகட்டத்தில் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு வலியுறுத்தி இருந்தாலும் பல தனியார் பள்ளிகள் பெற்றோரைத் துரத்தித் துரத்தி கட்டண வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்க்கும் யோசனைக்கு வந்திருக்கிறார்கள். நிச்சயமாக பொதுக் கல்வி முறைதான் நன்மை பயக்கும். அதை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முழு தகுதி வாய்ந்தவர்கள் என்பதை பொதுமக்கள் கவனத்துக்கு இத்தருணத்தில் கொண்டு வர விரும்புகிறோம். அதேபோல அரசுப் பள்ளிகள் அனைத்தும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆங்கில வழிக் கல்வியை கற்பித்து வருகின்றன. இந்த நேரத்தில் அரசிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். தமிழகத்தில் கிட்டத்தட்ட 2000 ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. தற்போது கூடுதலாக மாணவர்கள் சேரும் சூழல் கனிந்திருப்பதால் இந்தப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியரேனும் நியமிக்கப்பட வேண்டும்" என்கிறார் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ்.

பலப்படுத்த வேண்டிய நேரம்

"அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் வருவது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். அதே நேரத்தில் இந்தத் தருணத்தில் நம்முடைய பள்ளிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சராசரியாக அரசுப் பள்ளி வகுப்பறைகள் 440 சதுர அடி கொண்டவை. மாணவர் ஒருவருக்கு 10 சதுர அடி என்று வைத்துக் கொண்டால் 40 மாணவர்களுக்கு 400 சதுர அடி அவசியமாகிறது. மீதமுள்ள 40 சதுர அடி ஆசிரியருக்கானது. அப்படி இருக்கையில் ஏற்கெனவே பெருவாரியான அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பு 60 முதல் 80 மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படும் பட்சத்தில் முதலில் அதிக எண்ணிக்கையிலான வகுப்பறைகள் தேவைப்படும். இதேபோன்று கூடுதல் எண்ணிக்கையில் மேஜை, இருக்கை, காற்றோட்டமான இடம், தூய்மையான கழிப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விசாலமான விளையாட்டுத் திடல், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பலவற்றை ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கிறது.

ஏற்கெனவே 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில்தான் சராசரியாக இடைநிலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளை விடுத்து அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்க்க வரும் பெற்றோர் இந்த விகிதாசரத்தையும் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடவே செய்வார்கள். அதுமட்டுமின்றி பாட ஆசிரியர்கள் சிறப்பாக கற்பித்தாலும் குழந்தைகளின் தனித்திறன்களை வளர்க்கும் சூழலும் இன்றைக்கு அத்தியாவசியமாகி இருக்கிறது.

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் 1 முதல் 5 வகுப்புவரை ஒரே ஆசிரியரே அத்தனை பாடங்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கையில் இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட தனித்திறன்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் முழு நேரமாக நியமிக்கப்பட வேண்டும். அதன் மூலமாக புதிய மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். மேலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி அழைத்து வர முடியும்" என்கிறார் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பிச்சைக்கனி.

கரோனா காலத்தில்தான் என்றில்லை சாதாரண காலத்தில்கூட தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைக்க நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும் கடன் மூட்டையைச் சுமக்க நேர்கிறது. ஸ்மார்ட் வகுப்பறை முதற்கொண்டு பல வசதிகள் அரசுப் பள்ளிக்கூடங்களிலும் இன்று நடைமுறையில் உள்ளன. மாநிலப் பாடத்திட்டத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே ஏழ்மையின் காரணத்தினால் மட்டுமல்ல தரமான கல்வி வேண்டியும் அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் விரைந்து வரும் நாட்கள் தூரத்தில் இல்லை என்ற கருத்தையும் கல்வியாளர்கள் பலர் முன்வைக்கிறார்கள்.

15 comments:

  1. வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் ஆசிரியர்கள் ???????
    கவனிக்குமா தமிழக அரசு !

    ReplyDelete
  2. பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதிகள்
    பள்ளிமானியம்
    பள்ளி பராமரிப்பு மானியம்
    ஆர்எம்எஸ்ஏ நிதி
    எஸ்எஸ்ஏ நிதி
    பிடிஏ நிதி
    ஸ்பெஷல் பண்ட்
    புரவலர் நிதி

    இவை அனைத்தையும் முறையாக செலவு செய்தாலே அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துவிடும்.. ஆனால் தலைமை ஆசிரியர்களாக உள்ள பல கருப்பு ஆடுகள் எல்லாவற்றிற்கும் போலி ரசீதுகளை வைத்து அந்த பணத்தையெல்லாம் களவாடி விடுகிறார்கள்.. ஆய்வக பொருட்களும், நூலகப் புத்தகங்களும் அரசே நேரடியாக கொடுப்பதால் அந்த பணம் மட்டும் தப்பித்துவிட்டது.. இல்லையேல் அதையும் சுருட்டி விடுவார்கள்..

    பல பெண்கள் பள்ளியில் தற்காப்பு பயிற்சிக்காக வழங்கப்படும் நிதி 9000
    பசுமைப்படை நிதி 5000 எல்லாவற்றையும் சுருட்டி விடுகிறார்கள்..இந்த லட்சணத்தில் அரசு எதுவுமே செய்யவில்லை என புளுகுகிறார்கள்... இன்றைய இளைஞர்கள் அந்தந்த ஊரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று தீர்மானம் பதிவேடு, கேஷ்புக், ரசீது கோப்பு அனைத்தையும் சரிபார்த்து அதில் குறிப்பிடுள்ள செலவினங்கள் பள்ளியில் உண்மையில் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.. சரியாக இல்லையெனில் கேள்வி கேட்க வேண்டும்.. வழக்கு தொடர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஐயா தாங்கள் கூறிய கருத்தில் எல்லாம் ஏற்கக்கூடியது அல்ல. தலைமை ஆசிரியர்களில் நல்லவர்களும் உள்ளனர். அதேபோல் நூலகப் புத்தகங்களும் ஆய்வகப் பொருள்களும் அரசாங்கம் கொடுப்பதாகச் சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். ஆனால் அவற்றின் தரம் அவற்றின் உண்மையான விலை பற்றி தங்களுக்குத் தெரியவரவில்லை என்று நினைக்கிறேன்.

      Delete
  3. Ellarume govt school la pasangala sellanum

    ReplyDelete
  4. கடந்த 5 ஆண்டுகளுக்குமேல் 15 குழதைகளுக்கு குறைவாவே உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியில் இணைத்து வகுப்பிற்கு ஒரு ஆசிரியர்மற்றும் கட்டிட மைபையும்மேம்படுத்தலாம் .குழதைகளிடம் ஆசிரியர்கள் சிறிய அளவிலாவது ஆங்கில அறிவை வளர்க்க மனதார உழைக்கவேண்டும்

    ReplyDelete
  5. How many govt. Staff children study in gov. Schools? Though priv. School teachers are talented, why do they seek admission in privt. School?

    ReplyDelete
  6. If you told private teachers are talented why we are not get a govt job???

    All govt teachers are get a job in only trb examination

    So why ?????

    ReplyDelete
    Replies
    1. Super. If they have talented why are they working in private schools?

      Delete
    2. Some bodys are expert in teaching somebodys are expert in memorising

      Delete
    3. In PGTRB 2012 my wife got 102 marks. but some one got only 50 marks in PGTRB 2012. He/She was selected for appointment in PGTRB 2012. How is it possible? So private teacher is talented than others.

      Delete
  7. அரசு வேலையில் உள்ள அனைவரும் அரசு பள்ளியில் தனது குழந்தைகளை சேர்த்தால் நடுத்தர மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளையும் சேர்ப்பர். அரசு பள்ளிகளை மூட வேண்டிய நிலை வராது.

    ReplyDelete
  8. எனது மனைவிக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை எனவே எனது இரண்டு குழந்தைகளையும் இந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் சேர்க்க உள்ளேன்

    ReplyDelete
  9. Private teachers.
    Pgtrb யில் அரசுப்பள்ளி ஆசிரியரைவிட 1% மதிப்பெண் குறைவு.ஆனால் 100% உழைப்பு.

    Govt teachers.

    1% அதிகம். 35% வீத உழைப்ப. அவ்வளவுதான்.

    By அரசுப்பள்ளி ஆசிரியர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி