மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியீடு...அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - kalviseithi

May 5, 2020

மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியீடு...அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவை அடுத்து உடனடியாக பிளஸ் 1 வகுப்புக்கான 3 பாடங்களுக்கான தேர்வுகள், பத்தாம் வகுப்புக்கான அனைத்து தேர்வுகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் தேர்வுகள் நடப்பது கேள்விக்குறியானது.

இதுபோல தேர்வுகளை நடத்தாமல் இருக்க முடியாது என்பதால் பத்தாம் வகுப்பு தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்தலாம் என்று அரசுத் தேர்வுத்துறை எண்ணியுள்ளது. இந்த தேர்வுக்கான அட்டவணை மே மாத இறுதியில் வெளியிடவும்  முடிவு செய்துள்ளது. மார்ச் மாதம் 26ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 1 தேர்வு (3 தேர்வுகள்), மார்ச் 23ம் தேதி நடத்த பிளஸ் 2 தேர்வில் எழுத முடியாமல் போனவர்கள் ஆகியோருக்கும் ஜூன் மாதம் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஜூன் மாதத்தில் அட்டவணை தயாரிக்க   திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி  மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

5 comments:

 1. என்ன ஆன்லைன் ? எங்கே எத்தனை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எத்தனை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைனில் தினந்தோறும் வகுப்பு எடுக்கிறார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

  ReplyDelete
 2. Press partha pothum yathava sollu

  ReplyDelete
 3. In kalvi channel they are teaching only in tamil.Pl explain in English also.

  ReplyDelete
 4. In kalvi channel they are teaching only in tamil.Pl explain in English also.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி