ஆசிரியர்கள் , பெற்றோர் மாணவர்களை மனரீதியாக தயார் படுத்திய பின்பு தேர்வு அறிவிப்பதே சரியாக இருக்கும்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனையடுத்து, தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இன்னும் 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படவில்லை. பிளஸ் 1 பொதுத்தேர்விலும் ஒரு பாடத்திற்கு தேர்வு நடத்தப்படவில்லை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அரசு அறிவித்தது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 10-வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார். மேலும், 11-ம் வகுப்பு கடைசி தேர்வு ஜூன் 2-ம் தேதி நடைபெறும். மார்ச் 26-ல் நடைபெற இருந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டதால் ஜூன் 2-ம் தேதி நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு கடைசி தேர்வை எழுதாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்பு மதிப்பெண் திருத்தம் பணி மே 27-ம் தேதி முதல் தொடங்கும் என்றார். தேர்வு அறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும். மாணவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்து தரப்படும். பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு என்ன அவசரம்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பீதியும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. கொரோனா அச்சம் அதிகரித்துள்ள நிலையில் தேர்வு அறிவிப்பு பெற்றோர், மாணவர்கள் மனதில் மேலும் பதற்றம் உருவாக்கும். தேர்வு தேதி அறிவிக்கும் முன்பு ஆசிரியர்-பெற்றோர் சங்க பிரதிநிதிகளோடு பரிசீலிக்கப்பட்டதா? ஆசிரியர்கள் , பெற்றோர் மாணவர்களை மனரீதியாக தயார் படுத்திய பின்பு தேர்வு அறிவிப்பதே சரியாக இருக்கும். கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்தபின் தேர்வு நடத்துவதே சரியானது. எனவே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்கள் கவனிக்க june மூன்றாம் வாரத்திற்கு பிறகே தேர்வு என்று இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்த மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் தேர்வுகளை ஜூன் முதல் வாரத்திலேயே நடத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதேபோன்று பள்ளிகள் திறப்பு ஆகஸ்ட் மாதம் ஜூலை மாதம் என கூறினாலும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் திறக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது .
ReplyDeleteமேலும் ஆசிரியர்கள் மட்டும் ஜூன் முதல் வாரத்திலிருந்து பள்ளிக்குச் சென்று பள்ளி சேர்க்கை மற்றும் 5 8 10 12 வகுப்புகளை முடித்துச் செல்லும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணிகளையும்.
பள்ளி மாணவர் சேர்க்கைபணிகளையும் கவனிக்க வேண்டிவரும் என நம்பப்படுகிறது ஜூன் 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று அடுத்த கல்வியாண்டுக்கான பணிகளை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் அறியப்படுகின்றன எனவே அனைத்து ஆசிரியர்களும் ஜூன் 1 முதல் பள்ளிக்கு செல்லும் வகையில் தங்களை தங்களையும் தங்கள் மன நிலையினையும் தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Any news about pg trb chemistry case detail & counselling
ReplyDeleteJuly to august
DeleteNot possible this year
DeletePrivate school la April and may ku salary illayama ketta ine school open pannunathuku Aprm nanga salary tharom nu soldranga Athu varaikum intha 5000 thousand ah nampi iruntha family ki enna pathil soldrathu intha situation la Vera job kum poga mudiyathu 10 th ku exam vacha special class nu one day 100 rs Tharanga Athum weekly once what a culprit private school management (not all)
ReplyDeleteYes yes
Deleteதேர்வு நடைபெற வேண்டும் அப்பனாதான் எங்களுக்கு சம்பளம்
ReplyDeletedubukku
Deleteபள்ளி குழந்தைகள் பற்றி கவலைஇல்லை. இவர்களுக்கு சம்பளம்பற்றி தான் கவலை.
ReplyDeleteகுடும்பம் இருந்தாதான் பிள்ளைகள் பிள்ளைகள் இருந்தாதான் பள்ளி??? Pvt school சம்பளம் தரமாட்டேங்குது govt...?
Deleteபெற்றோர மற்றும் மாணவர் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்...
ReplyDeleteகட்டாயமாக தேர்வு எழுத வேண்டும் எனில் அனைத்து தேர்வு மையங்களிலும் போக்குவரத்து வசதி,கழிவறை வசதி,மாஸ்க்,சானிடைசர்,சமூக இடைவெளி பின்பற்றுதல்,மாணவர்களை மருத்துவ சோதனை செய்தல்,பெற்றோர்,மாணவர்,
ஆசிரியர்களுக்கு தகுந்த உளவியல் ஆலோசனை வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் காப்பீடு ஆகிய செயல்களை முறையாக செய்தல் வேண்டும்..
இவையனைத்தையும் செய்தும் கூட தொற்று ஏற்படுமானால் அதற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்...மேலும் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும்,இழப்பீடும் வழங்க வேண்டும்...இதுதான் ஒரு மக்கள் நல அரசின் கடமை...இதை செய்வார்களா?...
அவர்களும் குறைந்து விடும் என்று நினைத்து சொல்லி இருக்கலாம். ஆனால் முதலில் குழந்தைகள் வைத்து பரீட்சை செய்யக்கூடாது. June endல் தொடங்கி இருக்கலாம்.Immunity இல்லாதகுழந்தைகள் என்ன செய்யும்?எல்லாம் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து அனுப்ப வேண்டியதுதான்.Grade போட்டு pass செய்து இருக்கலாம்.As a mother ஆக குழந்தை யை அனுப்ப மனம் இப்போதே பயப்படுகிறது.அவர்கள் என்ன செய்தாலும் நாம் அதற்கு குறை தான் கூறுகிறோம். ஆனால் குழந்தைகள் விஷயம் என்பதால் மனது படபடக்கிறது.
ReplyDeleteYes sister.nenga solrathu sarithan.me to.
DeleteAdutha jenmam ondru erunthal private teacher ha.... Porakave kudathu...
ReplyDeleteYes teachera ve poraka kudathu
Deleteஅரசின் முடிவு சரியா தவறா என பட்டி மன்றம் நடத்த வேண்டிய நேரமில்லை மாறாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் மன நிலையயை மனதில் கொண்டு நிதானமாக செயல்பட்டு முடிவு எடுக்கவேண்டிய நேரம் இது மேலும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அதாவது மார்ச் 23 அன்று தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மட்டும் ஜூலை மாதம் தேர்வு நடத்திவிட்டு பிறகு தேர்வு முடிவுகளை வெளியிடலாம் காரணம் கல்லூரி திறப்பு செப்டம்பர் மாதம் என்பதால் ஜூலை இறுதியில் மதிப்பெண் அட்டை கொடுத்தால் மாணவர்கள் கல்லூரியில் இணைவதற்கு உதவியாக இருக்கும் பிறகு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறையில் முதல் இரண்டாம் மூன்றாம் திருப்புத் தேர்வுகளின் அடிப்படையில் வழங்கி அவர்கள் மேல்நிலை வகுப்புக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் இது சாத்தியமானால் மாணவர்களின் உயிர் காக்கப்படும் நன்றி
ReplyDelete