10 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கவ்வித்துறையில் மூன்று விதமான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் - kalviseithi

May 25, 2020

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கவ்வித்துறையில் மூன்று விதமான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டாலும் கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு விதமான மூன்று திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் ஜூன் 15ஆம் தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு மூன்று விதமான திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

# பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி விடைத்தாள்களை தாராள மனதுடன் திருத்தி தேர்வு முடிவுகளை வெளியிட கூடியது முதல் திட்டம் எனச் சொல்லப்படுகிறது.

# நான்காவது முறையாக ஜூலை ஒன்றாம் தேதிக்கு தேர்வை தள்ளி வைப்பது இரண்டாவது திட்டம் எனக் கூறப்படுகிறது.

# மூன்றாவது திட்டம், பொதுத்தேர்வை நடத்தாமல் , காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்வது என தெரிகிறது.

* இந்த மூன்று திட்டங்களில் ஒன்றை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் முதல் திட்டத்தை, கல்வித்துறை செயல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக, கடந்த 17ஆம் தேதி தந்தி தொலைகாட்சி செய்திவெளியிட்டது குறிப்பிடத்தக்கது

7 comments:

 1. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்குப் பதிலாக கீழ்க்காணுமாறு செய்யலாம்.

  1. அரையாண்டு, முதல்திருப்புதல், இரண்டாம் திருப்புதல் போன்றவற்றின் சராசரி மதிப்பெண் கொண்டு முடிவு செய்யலாம்.

  2. அரையாண்டு, முதல்திருப்புதல், இரண்டாம் திருப்புதல் மதிப்பெண்களில் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் உள்ளதோ, அதையே மாணவரின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொண்டு, அதன்படி மதிப்பெண் பட்டியல் வழங்கலாம்.

  இந்த இரண்டு முறைகளிலுமே, தேர்ச்சி பெறாத பாடங்களை, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 35 மதிப்பெண்களாக மாற்றி வழங்கலாம்.

  நினைவுக்குறிப்பு :

  இந்த மூன்று தேர்வுகளையுமே மாணவர்கள் முழுப்பாடத்திட்டத்தின் ( FULL PORTION ) அடிப்படையிலே எழுதினார்கள் என்பதை நாம் கவனத்தில் கொண்டு வரலாம்.

  நடுச்சூரங்குடி அ. கங்கை அமரன்.

  பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்),
  பி. ஏ. சி. எம். மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.

  ReplyDelete
  Replies
  1. I accept this..govt pls refer this method..

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி