தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்க 19 ஆம் தேதி விவரம் அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2020

தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்க 19 ஆம் தேதி விவரம் அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன்


வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது குறித்து வருகின்ற 19 ஆம் தேதி தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

தமிழகம் அரசின் நடவடிக்கைகளால் கரோனா இறப்பு எண்ணிக்கையில் குறைந்த மாநிலமாக உள்ளது . ஈரோடு மாவட்டம் மக்களின் ஒத்துழைப்பால் கடந்த 29 நாட்களாக புதிதாக கரோனா தொற்று எதுவும் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு யுடியூப் , கல்வி சேனல் ஆகியவற்றின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது . 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது.

1 comment:

  1. தலைவர் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி