கணினி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியில் 2 வார பைதான் புரோகிராம் ( Python Program ) பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2020

கணினி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியில் 2 வார பைதான் புரோகிராம் ( Python Program ) பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பைதான் புரோகிராம் ( Python Program ) பயிற்றுவிக்கும் ஒரு முயற்சியாக , அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் 2 வார Faculty Development Workshop on ' Problem solving using Python ' திட்டமிடப்பட்டுள்ளது .

இப்பயிற்சியினை Amphisoft Technologies நிறுவனம் மூலம் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் , பைத்தான் புரோகிராம் ( Python Program ) மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது என்றாலும் , உயர் படிப்பில் சமாளிப்பது கடினம் என்பதால் , இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர்கள் சுமார் 300 மணிநேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிட ஊக்குவிக்கும் வகையில் Bootcamp ( துவக்க முகாம் ) நடத்தப்பட உள்ளது. பைதான் புரோகிராம் ( Python Program ) ஒரு பொது நோக்கத்திற்கான மொழியாக இருப்பதால் , இந்த Bootcamp ( துவக்க முகாம் ) மூலம் ஆசிரியர்கள் , திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். மேலும் Web Developing , Data Analysis , Artificial Intelligence மற்றும் Machine Learning and Scientific Computing போன்ற வளர்ந்து வரும் துறைகளுடன் மாணவர்கள் தங்கள் ஏதுவாக Bootcamp ( துவக்கமுகாம் ) எதிர்காலத்தை வடிவமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான Bootcamp ( துவக்க முகாம் ) 12 நாட்களுக்கு காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை Amphisoft நிறுவன வல்லுநர்களின் நேரடி விரிவுரைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து E - Box Online Practice Session நடைபெறும். பயிற்சி அமர்வின் போது ஆசிரியர்கள் சுமார் 10 realtime பயிற்சிகளை செய்து முடிப்பர்.

 நடைமுறையில் அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்த அவர்களுக்கு நேரடி வழிகாட்டல் வழங்கப்படும். 12 நாட்கள் Bootcamp முகாம் முடிவதற்குள் , ஒரு ஆசிரியர் 120 realtime பயிற்சிகளைத் தோராயமாக முடித்திருப்பார். பங்கு பெற்ற அனைத்து கனிணி ஆசிரியர்களுக்கும் பயற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியானது + 2 மதிப்பீட்டுப் பணியைப் பொறுத்து மாறுபடும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பயிற்சி நேரம் குறித்து Amphisoft Technologies நிறுவனம் தெரிவிக்கும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கும் இந்த COVID - 19 Lockdown காலகட்டத்தில் அவர்களை தகுதிவாய்ந்தவர்களாக மாற்றுவதற்காக இந்த Bootcamp ( துவக்க முகாம் ) மிக முக்கியமானதாக இருக்கும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் eboxcolleges . com / tncsereg இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் Bootcamp ( துவக்க முகாமில் ) பதிவு செய்து பங்குபெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இப்பயிற்சி தொடர்பாக ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் Dr . Balamurgan , Learning Officer , Amphisoft Technologies E - Mail ID Chief balamurugan@amphisoft.co.in மற்றும் mobile number 9442019192 - க்கு தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.




6 comments:

  1. Olunga oru pay order podatheriyala ithula python saithanu solli ura emathura Vela

    ReplyDelete
  2. Super Useful for Computer Teacher

    ReplyDelete
  3. அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் நிரந்தர கணினி ஆசிரியரை நியமித்து தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் நிரந்தர கணினி ஆசிரியரை நியமித்து தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டுகிறேன்.
    I too

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி