நாளை ( மே 21) ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும் - கல்வி அதிகாரி உத்தரவால் ஆசிரியர்கள் அதிர்ச்சி! - kalviseithi

May 20, 2020

நாளை ( மே 21) ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும் - கல்வி அதிகாரி உத்தரவால் ஆசிரியர்கள் அதிர்ச்சி!


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால்,  ஆசிரியர்கள் மே 21 அன்று வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த பின்பும் பழைய செயல்முறைகள் உத்தரவினை சுட்டிக்காட்டி நாளை ( மே 21)  அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

காணொலிக் காட்சியில் மதிப்புமிகு கல்வித்துறை ஆணையர் அவர்கள் அளிந்த வழிகாட்டுதலில் திருவாரூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து வகை பள்ளிகளின் பணிபுரியும் தலைமை ஆசிரியர் , முதுகலை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் , சிறப்பாசிரியர்கள் , பிறவகை ஆசிரியர் ஆகியோர் 21.05.2020 வியாழன் அன்று காலை 9.30 மணிக்கு வருகை தரவும் , எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகளை செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிக்கு வருகை தராத ஆசிரியர்கள் பற்றிய விபரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு 21.05.2020 காலை 11 மணிக்குள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளிகளின் ( உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிகுலேசன் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால்,  ஆசிரியர்கள் மே 21 அன்று வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த பின்பும் பழைய செயல்முறைகள் உத்தரவினை சுட்டிக்காட்டி நாளை ( மே 21)  அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.10 comments:

 1. Pls june 1st weeklae iruthu vara solalam..21.05.20 poi ena panurathu

  ReplyDelete
 2. ஆவடி மாவட்டக்கல்வி அலுவலகத்திற்குட்ட அனைத்து வகையான பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்/ மெட் ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு

  தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் 21.05.2020 அன்று முதல் பள்ளிக்கு வருகைதந்து பள்ளி வேலைகளில் ஈடுபட வேண்டும் என்ற தகவலை ஆசிரியர்ளுக்கு வழங்கி அனைவரும் வந்துவிட்டனர் என்ற சான்றினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது...

  மாவட்டக் கல்வி அலுவலர்
  ஆவடி.

  ReplyDelete
  Replies
  1. This is old news pa. Then they changed and will announce later

   Delete
 3. Thiruvarur also cancelled.

  ReplyDelete
 4. All teachers have to come when CEO announce for all districts

  ReplyDelete
 5. ஆளில்லா டி கடையில் காப்பி யாருக்காக, அர்த்தமில்லாத அரசு அதிகாரிகள்

  ReplyDelete
 6. This is old news. Kalviseithi Admin naduvil 2 natkal vizhavai sirapikka sentruvittathal pathivu late aga potrupar pola. Vidungappa

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி